பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ஹிராடெடஸின்


கட்டளையிட்டது. அன்று முதல் அந்தக் கோயிலில் பெண்களே குறி சொல்லி வந்ததால், அப்பொலோ அசரீரிவாக்கு அங்கே கேட்கப்படுகிறது என்ற புகழும் அக்கோயிலுக்கு ஏற்பட்டது.

அப்பொலோ தெய்வ வரலாறு

அப்போலோ என்ற தெய்வம் ஜியுஸ் என்ற கடவுளுக்கும், வீடோ எனும் தேவதைக்கும் டெலாஸ் என்ற தீவில் பிறந்தவர். ஹீரா எனும் தேவதை செய்யும் கொடூரக் கொடுமைகளைத் தாங்க முடியாத லிடோ தேவதை; அந்தத்தீவுக்கு ஓடி ஒளிந்து கொண்டாள்.

அப்பொலோ, தண்டனை தரும் கடவுள், உதவி செய்யும் கடவுள். தீமைகளைப் போக்கும் கடவுள், இன்னிசை வழங்கும் கடவுள், கால்நடைகளைக் காக்கும் கடவுள், நகரங்களை உருவாக்குவதில் பெரும் பங்கு கொள்ளும் கடவுள், எல்லாவற்துக்கும் மேலே வானவீதியிலே வலம் வந்து கொண்டிருக்கும் ஒளி வழங்கும் கடவுள், என்று பலவிதமான அதிகாரங்களைப் பெற்றுள்ள கடவுள் ஆகும்.

இவ்வளவு அதிகாரங்களை ஒரு கடவுள் பெற்றுள்ளார் என்பதாலும், அதிலும் மக்கள் வாழ்க்கைக்குரிய எல்லா அதிகாரங்களும் ஒரே கடவுளிடமுள்ளவராக இருப்பதாலும், இந்த அப்பொலோ தெய்வத்தை கிரேக்க மக்கள் மூலமாக ரோமானியர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

டெல்பியில் பெண் பூசாரிகள் குறிசொல்லும் சம்பவங்கள், இன்றும் தமிழ் நாட்டில் பல இடங்களில், அம்மன் கோயில் மண்டபங்களில் திருவிழா போல நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம்.

ஆசியா மைனர் என்ற நாட்டின் ஒரு பகுதியான பிரிஜியாவில் கார்டியஸ், மைதாஸ் என்ற இரு வல்லரசர்கள் ஆண்டுவந்தார்கள். இந்த பிரிஜியா என்ற பகுதியிலேதான் முதன்முதல் புல்லாங்குழல் என்ற இசைக் கருவி செய்யப்பட்டது என்றும், கிரேக்க நாட்டுக்கு