பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ஹிராடெடஸின்




மன்னன் மைதாசைப் பற்றி மற்றுமோர் கருத்தையும் ஹிராடெடஸ் அறிவிக்கிறார். “ஒரு நேரம் பான் என்பவர் புல்லாங்குழலிலும், அப்பொலோ ஏனும் தெய்வம் யாழிலும் பாட்டுக்களை வாசித்துக் கொண்டிருந்தார்கள். இந்த இருவரில் இசைக் கருவிகள் வாசிப்புக்களில் எவர் வல்லவர் என்ற போட்டிக்குரிய தீர்ப்புக் கூறும் நடுவராக மைதாஸ் நியமிக்கப்பட்டிருந்தார். பான் வாசித்த புல்லாங்குழல் இசையே சிறந்தது என்று நடுவர் தீர்ப்புக் கூறினார்.

சினம் பொங்கிய அப்பொலோ தெய்வம், மைதாஸ் காதுகளைக் கழுதையின் காதுகளாக மாற்றிவிட்டார். இது வேறு எவருக்கும் தெரியாது. ஒரு நாள் அவர் முடிவெட்டிக் கொள்ளும் போது தனது தலையிலே போட்டிருந்த முக்காட்டை அகற்றிய போது, அந்த முடிவெட்டுபவன் மைதாஸின் கழுதைக் காதுகளைப் பார்த்து விட்டான்.

இந்த ரகசியத்தை அவன் அந்த ஊர்மக்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று எண்ணினான். மன்னனுக்கு இருப்பது கழுதைக் காதுகள் என்று வெளியே கூறினால், அரசனைப் பற்றி இழிவாகப் பிரச்சாரம் செய்கிறான் என்ற குற்றத்துக்கு ஆளாகி, சிரச்சேதம் ஏற்பட்டு விடுமே என்ற பயமும் அவனுக்குள் இருந்தது. அதற்காக ஒரு தந்திரம் செய்தான்.

நான்கு வீதிகள் ஒன்று கூடும் இடத்தில் ஒரு குழிதோண்டி அதில் ஒரு நாணல் புல்லை நட்டு, அக்குழியின் உள்ளே தனது வாயை வைத்து, அரசர் காதுகள் கழுதைக் காதுகள் என்று சொல்லிவிட்டு, மண்ணைப் போட்டு குழியை மூடித் தனது எண்ணத்தை ஊராருக்குத் தெரிவித்தான். ஆனால், காற்றில் வளைந்து வளைந்து அசையும் போதெல்லாம் ‘அரசர் காதுகள் கழுதைக் காதுகள்’ என்ற சொற்களை ஒலியிட்டு, பேரிரைச்சலுடன் நாணற் புல் தெரிவித்துக் கொண்டிருந்தது. அதனால், அந்த அரச ரகசியம் ஊரெல்லாம்