பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

67


இருதோள்கள், மார்பு, நெற்றி ஆகிய எட்டு உறுப்புக்களும் தரையில் படும்படி வணங்குவதையே சாஷ்டாங்க நமஸ்காரம் என்பர் தமிழர். இந்த முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்கிறார் ஹிராடெடஸ்.

★ பாரசீகர்கள் தங்கள் பெயரின் இறுதியில் ‘இஸ்’ எனும் எழுத்தைச் சேர்த்துக் கொண்டு, அவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்வர் என்கிறார் ஹிராடெடஸ் எடுத்துக்காட்டாக, அரியாண்டில், அர்டமிஸ், சாக்ரடிஸ், அரசமிஸ், டையோனிசஸ், ஹிராடெடஸ் என்றெல்லாம் கூறலாம்.

ஆனால் தமிழர்கள் அர் என்ற எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். குறிப்பாக ஆதித்தினார், பரிதியார், இலக்குவனார், சிலம்பொலியார், நன்னார் என்று குறிப்பிடலாம். வடவாரியர் தமிழகம் வந்தேறிய பின்பு, கவுண்டர், செட்டியார், ஆசாரியார், ஆச்சாரியார், ஐயர், அய்யங்கார், பறையனார், கோமுட்டியார் என்றெல்லாம் மாறி, வர்ணாசிரமப் பிரிவுகள் ஆதிக்கத்துள் அமிழ்க்கப் பட்டு விட்டன.

★ உயிரே போனாலும் பொய் பேசுதல் கூடாது என்பது பாரசீகம், கிரேக்கம் பண்பாடுகள். ஆனால் பேசாமல் இருக்கிறார்களா? இருக்க முடியாது. காரணம், மனிதக் குணம் எப்போதும் மாறி மாறி ஆட்டமிடும் குரங்கு மனம் உடையது. அடக்குவது பெரும் சிரமம்.

இதை நன்கு உணர்ந்த வள்ளுவர் பெருமான், ஒரு விதிவிலக்கைக் கொடுத்துள்ளார். அதாவது

“பொய்ம்மையும் வாய்மை யிடத்து புரை தீர்ந்த
நன்மை பயக்கு மெனின்”

(குறள் 292)