பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ஹிராடெடஸின்


என்ற திருக்குறாளால், பொய்யே சொல்லக் கூடாது, வாய்மையே பேணு என்று கூறிய தெய்வப் புலவர் மனிதன் தன்னையறியாமலே பொய் கூறினாலும் கூறிவிடுவானோ என்பதற்காக, அப்படிக் கூறி பொய் புரை தீர்ந்த நன்மை பயக்குமானால் அவனை மன்னிக்கலாம் என்று ஓர் விதிவிலக்கும் அளித்துள்ளார்.

★ ஆடைகள் அணியும் முறைகளைப் பற்றி ஹிராடெடஸ் கூறும்போது, பாபிலோனியர்களும், கிரேக்கர்களும், பாரசீகர்களும் தமிழர்கள் அணிந்து வந்த உடைகளையே அணிந்தனர் என்கிறார். அதாவது கால்வரை தொங்கும் ஆடை அல்லது வேட்டி, தலைமயிரை நீளமாகக் குடுமிபோல் வளர விட்டுப் போர்த்திக் கொள்ளல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார் அவர். கி.மு.469 முதல் 399 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த தத்துவ நாவலர் சாக்ரடிஸ் தமிழர் உடைகளையே அணிந்திருந்தார் என்று கிரேக்க வரலாறு கூறுகின்றது.

★ ஆணும் - பெண்ணும் சிற்றின்பத்தில் விளையாடிய பிறகு, அவர்கள் குளித்துவிட்ட பிறகே பாத்திரங்களையும், துணிமணிகளையும் தொடவேண்டும் என்பது இன்றும் என்றுமுள்ள தமிழர் பண்பாடு. இந்தப் பண்பாடும் பழக்க வழக்கங்களும் பினீசியர்கள் என்ற தமிழர்களால் அஸ்ஸீரியா நாட்டிற்கும், பிறகு பாபிலோனுக்கும், பின்னர் அங்கிருந்து கிரேக்கத்திற்கும் சென்று பரவியது.

★ பொட்டுக்கட்டி கோயிலுக்குப் பொதுவுடைமையாகும் பெண்கள் அயலாருடன் சேர்வதைப் பாவமாக ஏற்கப்படவில்லை. தெய்வத்துக்காக, கடவுள் தொண்டுகளுக்காக விடப்பட்ட அவர்களது உடலை தெய்வத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும். கடவுள் அப்பெண்களுக்கு மனித உருவிலேதான் வருவார். அதனால், கோயிலுக்கு வருபவனே கடவுள் உருவம் என்று ஏற்று அவர்கள் உடலின்பம் பெறுவார்கள். இது நாட்டுக்கு நாடு