பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ஹிராடெடஸின்


கொம்புகளில் மாட்டி, கழுத்திலே மணியாரங்களைக் கட்டி, மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டிட்டு, ஆரத்தி எடுத்து, தூய தீபாராதனைகளைக் காட்டி புதுப் பானையிலிட்டு பொங்கல், கரும்பு இவற்றை வற்புறுத்தி வாயில் ஊட்டி, மாலையானதும் மந்தைக்கு ஓட்டிக் காட்சிப் பொருளாக்கி, தமிழர் வீரத்தை நிலை நாட்டும் மாடுபிடி சண்டையெனும் ஏறுதழுவுதல் நடத்தி, வெற்றி பெறுபவனுக்கும் வீரத் திருவிழாவாகக் கொண்டாடி எருதுகளுக்குப் பெருமையும் புகழும் உண்டாக்கி மகிழ்வார்கள். இந்த நாளை மாட்டுப் பொங்கல் விழா, ஏறுதழுவல் விழா, வீர விளையாட்டு விழா, என்றெல்லாம் கொண்டாடி மகிழ்வார்கள். எருதுவுக்கு தமிழ்நாட்டிலே புனிதமும் உண்டு, தெய்வாம்சம் கருதும் சிறப்பும் உண்டு. எனவே இந்தப் புனிதவிழா எகிப்துக்கும், மெம்பிஸ் நகருக்கும் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியது. இந்த எருது விழா தமிழரது பண்பாட்டு விழாவாகும். இந்த விழாவை ஹிராடெடஸ் எகிப்து பற்றிக் கூறும் போது குறிப்பிடுகிறார்.

★ மாரடித்துக் கொண்டு துக்கம் கொண்டாடாத சாவு வீடுகள் தமிழ்நாட்டில் இல்லை; ஏன், இந்தியாவிலேயும் இல்லை எனலாம். மாரடைத்து அழுவது துக்கத்தின் அறிகுறி. பிணம் விழுந்த வீட்டின் அடையாளம். இது நெடுங்காலமாக தமிழ் நாட்டில் இருந்து வரும் வழக்கமாகும்.

★ ஆலயங்கள் புனிதமான இடங்கள். அந்த இடத்தில் ஆண் பெண் சிற்றின்பம் கூடாது என்பது தமிழ் நாட்டினரின் மிகச் சிறந்த கொள்கைகளுள் ஒன்றாகும். அதனால்தான், கோயிலுக்குள் தெய்வ வழிவாடு செய்யச் செல்லும் போது, கை, கால், முகங்களை கழுவிக் கொண்டு போவது இன்றுமுள்ள வழக்கமாகும்.

★ தென் எகிப்து நாட்டில், பெலூஷியம் அருகில் டாம்ளே என்ற ஊர் இருந்தது. இங்கு தன் அண்ணனை - அரசரை - ஓர் அறையில் வைத்து, அதைச் சுற்றிலும் தீ மூட்டி எரித்தார்கள். அதுபோலவே,