பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

71


பாண்டவர்களை கொல்ல அரக்கு மாளிகையைத் துரியோதனன் கட்டி நெருப்பு மூட்டியதாக மகாபாரம் கூறுகிறது. இந்த இரண்டிற்குமுள்ள நிகழ்ச்சிகளில், அரச குடும்பப் பொறாமைகளில் எவ்வளவு ஒற்றுமை காணப்படுகின்றது. கிரேக்கமும் இந்தியாவும் பரிமாறிக் கொண்ட கதைகளுள் இதுவும் ஒன்று.

★ கார்த்தேஜியினியர், கார்த்தேஜ் எனும் குடியிருப்பு பினீசியர்களால் வட ஆப்பிரிக்காவில், மத்திய தரைக் கடலையொட்டி ஏற்படுத்தப்பட்டது. ரோமுலஸ் என்பவரால், ரோம் நகர் உருவாக்கப்படுவதற்கு, கி.மு. 753 ஆம் ஆண்டில் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு.853 ஆம் ஆண்டில் கார்த்தேஜ் குடியிருப்பு நிர்மாணிக்கப்பட்டது. அதன் முதல் பெயர் போஸ்ரா என்று வழங்கப்பட்டது. போஸ்ரா என்றால் கோட்டை அல்லது அரண் என்று பொருள்.

பினீசிரியர்கள் கடலைக் கடக்கப் பரிசில் பயன்படுத்தினர். அந்த பரிசில் தென்னை, பனை மரங்களால் ஆனது. பரிசிலில் சென்று புதிய குடியிருப்பை ஏற்படுத்திய காரணத்தால் அந்த நகரம் போர்சோ என்று பினீசிய மொழியில் வழங்கப்பட்டது. அதுவே போஸ்ரா என்று மருவி, கோட்டையையும் அரணையும் குறிப்பிடுவதாயிற்று. எனவே, போஸ்ரா போர்சா இவற்றுக்குத் தமிழ் வேர்ச் சொல் பரிசு, பரிசல் என்பதே. பரிசல் என்றால் தெப்பம், ஓடம் என்பது பொருள். பரிசு என்றால் சிற்றோடம்.

★ தமிழர்கள் கோழி முதலிய சிறிய விலங்குகளின் கழுத்தைத் திருகியே பலியிடுவர்.

★ பெரிய விலங்குகளை அதற்கான பாறைகளில் வைத்து, கத்தியால் கழுத்தை வெட்டிவிடுவார்கள். எருமை, பன்றி. ஆடு முதலியவை பலியிடப்படுவனபோல.

★ தமிழர் அகழிகளைக் கோட்டையைச் சுற்றி வெட்டி, நீர் நிரப்பி அதனுள் முதலைகளை வளர்த்தார்கள்.