பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7


கேடா (Keda) : கேடு
சண்டலம் (Santalium) : சந்தனம்
சேபியோ (Sapio) : சப்பு (சுவை)
டிம்பனம் (Tympanam) : தம்பட்டம்
டெட்ரா (Terra) : தரை
தேபா (Theba) : தெப்பம்
நாரி (Nari) : நாரி அதாவது பெண்
நேவல் (Naval) : நாவாய்
நோஸ் (Nose) : இஞ்சி
பெர்ல்(Pearl) : பரல்
பலிஸ் (Polis) : பள்ளி
பாண்டஸ் (Pondus) : பாண்டில் (வளைந்த)
பில்லா (Pilla) : பிள்ளை, (பெண்)
ஃபெலிஸ் (Felis) : புலி
எலிபாஸ் (Elephas) : யாளி, யானை
ஹீரோ (Hero) : வீரா
ஹீரா (Hera) துர்க்கை : வீரி, காளி

மேலே உள்ள தமிழ்ச் சொற்களுக்கும் கிரேக்கச் சொற்களுக்கும் இடையே உள்ள, பொருள் ஒலியோசைகளைப் பார்த்துப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள கிரேக்கச் சொற்களுக்குரிய சமஸ்கிருதம் மற்றும் அதற்கான ஆங்கிலச் சொற்களின் ஓசைகளையும், பொருள்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மொழிக் கலப்பும் அவற்றின் பொருள்களும் புரியும். இதோ கீழே தந்துள்ளோம்; நோக்குக.

சமஸ்கிருதம் கிரேக்கம் ஆங்கிலம்
மாத மேடர் MOTHER
பிதா பேடர் FATHER
பிராதா பிரேடர் BROTHER