பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஹெர்க்குலிஸ்

களெல்லாம் மெலிந்து நலிந்து போய்விட்டன! என்று சொன்னான்.


ஹெர்க்குலிஸ் எழுந்து நின்றுகொண்டு, ‘அதை வதைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்!’ என்று கூறினான். அதைக் கேட்டதும், ஆயனும் கிழவியும் வியப்புற்று எழுந்து, அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஹெர்க்குலிஸ் மெதுவாகக் குடிசைக்கு வெளியே இறங்கினான். அவர்களும் அவனைத் தொடர்ந்து சென்று. அவன் குளித்துவிட்டு, திராட்சை ரசம் முதலியவை பருகிச் செல்லலாம் என்று அவனை வேண்டிக்கொண்டனர். ஆனால், அவன் மேற்கொண்டு அங்கே தாமதிக்க விரும்பவில்லை. யூரிஸ்தியஸைலப் பற்றிய நினைவோ, சீயஸ் கடவுளின் கட்டளையோ அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தானாகவே ஒரு பெருஞ்செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆவேசமுண்டாகிவிட்டது. கொடிய விலங்கின் பிடியிலிருந்து மக்களை எப்படியாவது விடுதலை செய்தாக வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.


வானமே கருத்துவிட்டது. விண்ணில் மீன்கள் மின்னிக்கொண்டிருந்தன. அவன் பல திராட்சைத் தோட்டங்களைக் கடந்து, மலைச்சாரலின் மேலே ஏறி நடந்து நிமீ வனத்தை அடைந்தான். அங்கே சென்றதும். அவன் சிறிது நேரம் அமைதியாக நின்று கவனித்தான். அப்பொழுது வெகு தொலைவில், கடல் அலைகள் கரையிலுள்ள பாறைகளின்மீது மோதுவது போன்ற ஓசை அவன் செவிகளில் ஒலித்தது. சிங்கத்தின் உறுமல்தான் அது என்பதை அறிந்து, அவன் சிரித்தான்.


வனத்தில், சீயஸ் தேவனின் கோயிலருகில், ஒரு பெரிய மரத்தடியில் அவன் நெடுநேரம் காத்திருந்தான். தன்னுடைய வில்லில் நாண் சரியாக இருக்கின்றதா என்று பார்த்து, அவன் கையில் ஓர் அம்பினையும் தயாராக எடுத்து வைத்துக்கொண்டான். வலத் தோளிலே கயிற்றில் கட்டியிருந்த அவனுடைய கதையும் தொங்கிக்கொண்டிருந்தது. நீண்ட நேரமாக ஓசை எதுவும் கேட்கவில்லை. வானத்தில் சந்திரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/16&oldid=1074299" இலிருந்து மீள்விக்கப்பட்டது