பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஹெர்க்குலிஸ்

நீண்ட பெரு முச்சுவிட்டுக் கொண்டு, மிகவும் பலமாக அழுத்தி மடங்கலின் குரல்வளையை நெரித்துவிட்டான்! சிங்கத்தின் மூச்சு ஒடுங்கி, அதன் அங்கங்கள் சோர்ந்து, விழுதுகள் போல் தொங்கிவிட்டன!


மாண்டுபோன சிங்கத்தை அப்படியே தன் தோள்களின்மீது தூக்கிப் போட்டுக்கொண்டு, ஹெக்குலிஸ் வனத்தைக் கடந்து, மலையிலிருந்து இழே இறங்கினான். திராட்சைத் தோட்டங்களின் வழியாக அவன் நடந்து செல்லுகையில், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவனைச் சூழ்ந்துகொண்டனர். ஆடியும், பாடியும், கூக்குரலிட்டும் அவர்கள் மகிழ்ச்சியோடு எழுப்பிய ஒலி செவிடுபடச் செய்வதாயிருந்தது. பெண்கள் ஆனந்தப் பெருக்கினால் அழுதனர்.


பலர் அவனை வழி மறித்து, ‘ஹெர்க்குலிஸ்! எங்களுடன் தங்கியிரு! பாலும், பணிகாரர்களும், திராட்சை மதுவும் ஏராளமாயிருக்கின்றன. அவைகளை அருந்திவிட்டுச் செல்லலாம். உன் உடலிலுள்ள புண்களுக்கும் மருந்து வைத்துக் கட்டுகிறோம்!’ என்று வேண்டினார்கள்.


ஆனால் ஹெர்க்குலிஸ் தன் நடையை நிறுத்தவில்லை. ‘அன்பர்களே! நான் நேராக மைசீனுக்குச் செல்ல வேண்டும்! சீயஸ் கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதே இப்பொழுது என் கடமையாயுள்ளது! இடையில் எனக்கு ஒய்வென்பதில்லை!’ என்று அவன் கூறினான்.


எனினும் மக்கள் அவனைப் பிரிய மனமில்லாமல், அவனைத் தொடர்ந்து சென்றனர். அவன் ஒரு நாள் மாலை மைசீன் நகரத்துக் கோட்டை வாயிலை அடைந்தான். உடனே கோட்டைக் காவலன், மேள தாளங்களுடனும் புல்லாங்குழல்கள், எக்காளங்கள் ஊதிக்கொண்டும் பெருந்திரளான ஜனங்கள் வருவதாயும். அவர்களுக்கு நடுவே கோளரி ஒன்றைத் தோள்களிலே சுமந்துகொண்டு ஹெர்க்குலிஸும் நடந்து வருவதாயும் யூரிஸ்தியஸுக்குச் செய்தி அனுப்பினான்.

அவசர அவசரமாக யூரிஸ்தியஸ், தன் படைவீரரை அழைத்துப் பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டு, அரி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/20&oldid=1074301" இலிருந்து மீள்விக்கப்பட்டது