பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

17

யணை மீது அமர்ந்து, வெற்றி வீரனை வரவேற்க ஆயத்தமானான். திறந்திருந்த அரண்மனைக் கதவுகளைத் தாண்டி, ஹெர்க்குலிஸ் உள்ளே நுழைந்து, கொலுமண்டபத்தை அடைந்தான். அவன் தோள்களிலிலும், உடலின் விலாப்புறங்களிலும் சிங்கம் நகங்களால் கிழித்த வடுக்களிலிருந்து உதிரம் பெருகிக் கொண்டிருந்தது. சூட்டினாலும், அவன் எடுத்துக் கொண்ட சிரமத்தினாலும், வழி நடையாலும் அவனுடைய முகம் காய்ந்து சிவந்து போயிருந்தது. அவன் கண்கள் வெறி பிடித்தவை போல உருண்டு கொண்டிருந்தன. இப்படி உக்கிரமான தோற்றத்துடன் விளங்கிய அவனைக்காட்டிலும் அதிக உக்கிரமாக தோன்றிற்று அவன் தோள்களிலே தொங்கிக் கொண்டிருந்த நிமீ வனத்துச் செத்த சிங்கம்.


அரியணையில் அமர்ந்திருந்த யூரிஸ்தியஸ் பயத்தால் நடுங்கினான். அவன் முகம் வெளிறிப் போய்விட்டது. அவன் மெதுவாக எழுந்து, பின்னால் இருந்த படை வீரர்களிடையே சற்று மறைவாக நின்று கொண்டான்.


அந்தக் கோழையின் மனநிலையை அறிந்து, ஹெர்லிலிஸ் இடியிடிப்பது போல் நகைத்தான். சபா மண்டபத்தின் நடுவிலே நின்றுகொண்டு அவன் தன் தன் இரு கைகளிலும் சிங்கத்தின் உடலை மேலே தூக்கிக் கீழே வீசியெரிந்தான்.


எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்! உயிரோடு கர்ச்சனை செய்துகொண்டிருந்த எந்த சிங்கத்தோடு நான் மல்லாடினேனோ, சீவன்ற்ற அதன் உடலைக் கண்டு இனி நீங்கள் அஞ்சிக்கொண்டிருங்கள் என்று அவன் உரக்கக் கூவினான்.

தரையில் தடாலென்று விழுந்த சிங்கத்தைக் கண்டதும், யூரிஸ்தியஸ் சபா மண்டபத்தை விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான்.


யூரிதியஸ், ஹெர்குலிஸ்.... இருவரில் நார் அரசன், யார் அடிமை? யூரிஸ்தியஸ் உலக முறைப்படி

ஹெர் - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/21&oldid=1033628" இலிருந்து மீள்விக்கப்பட்டது