பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

33

கால், அவன் மெதுவாக அதைத் தொடர்ந்து சென்றான். தரையிலே அவனைவிட அதிக வேகமாகப் பன்றி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், மலைப்பகுதியிலே அதன் கால்கள் கட்டையாயிருந்தமையால், அதே வேகத்துடன் ஏறிச்செல்ல அதனால் முடியவில்லை. மலையில் பணி தேங்கியுள்ள குட்டங்களில் அது இறங்கிச் செல்லுகையில்தான் அதைப்பிடிக்க முடியும் என்று அவன் கண்டான். ஆகவே, அதைப் பிணித்துப் பிடிப்பதற்குரிய வலையையும், சங்கிகளையும் அவன் ஆயத்தமாகக் கைகளிலே எடுத்து வைத்துக்கொண்டான். வழியிலே பணி பெய்து நிரம்பியிருந்த ஒரு பெரிய குட்டத்திலே பன்றி தொப்பென்று விழுந்ததும், ஹெர்க்குலிஸ் ஒரே பாய்ச்சலாக அதன் மீது பாய்ந்து, அது என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு முன்பே, அதைச் சங்கிலிகளால் பிணித்துவிட்டான். வெள்ளையான பால் குளத்தில் கரிய யானைக்குட்டி மிதப்பது போல் கிடந்த அப்பன்றியை ஒரு கணத்திற்குள் அவன் வலையினுள் தள்ளி வலையைத் தன் தோள்மீது துக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டான். வேட்டைநாய்கள் அக்கொடிய விலங்கைக் கடித்துப் பழி வாங்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தன. ஆனால், ஹெர்க்குலிஸுக்கு அதனிடம் மதிப்பும், இரக்கமுமே ஏற்பட்டன. அதற்கு வல்லமை இருந்தவரை அது ஓடிப் பார்த்தது. தன்னால் இயலாத நிலைமையில்தான் அது வீழ்ந்தது என்று அவன் அதைப் பாராட்டினான்.

காட்டு வராகத்தைச் சுமந்துகொண்டு மலையிவிருந்து இறங்கி வந்த ஹெர்க்குலிளைஸைக் கண்ட ஜனங்கள் உரக்க ஆரவாரம் செய்துகொண்டு, அவன் பின்னால் சென்றார்கள். மனிதர் எவராலும் முடியாத பெரும்பணியை அவன் நிறைவேற்றியதைக் கண்ட அவர்கள், எக்களிப்போடு அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள். அஉன் தோளிலே சாய்ந்திருந்த கரிய பிசாசை அவர்கள் அப்பொழுதுதான் நன்றாகப் பார்க்க முடிந்தது. கதிரவன் மறைந்து எங்கும் இருள் போர்த்துக் கொண்ட பிறகுதான் அவன் மக்களைப் பிரிந்து தனியாக நடக்க முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/37&oldid=1033787" இலிருந்து மீள்விக்கப்பட்டது