பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ஹெர்க்குலிஸ்

மன்னனின் மூத்த குமாரன் அது உண்மையென்றும், பேசும் பொழுது தான் சாட்சியாக இருந்ததாகவும் கூறினான். உடனே ஆஜியஸ், கடுங்கோபத்துடன் எழுந்திருந்து, அவனையும் ஹெர்க்குலிஸையும் தன் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுவிட்டு சபையிலிருந்து வெளியே போய்விட்டான்.


ஹெர்க்குலிஸ் அவனுக்குக் காதில் கேட்கும்படியாக ஆஜியஸ், இன்றிலிருந்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளும்! ஹெர்க்குலிஸையே எதிர்த்து விட்டீர்! இன்று கால்நடைகளில் பத்தில் ஒரு பகுதி உமக்கு ஆதாயம்தான். ஆனால் விரைவிலே நீர் இழக்கப் போவது உம்முடைய மகுடத்தையும், சிம்மாசனத்தையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும்! என்று இடிபோல் முழங்கிக் கொண்டு கூறினான்.


பிறகு அவன் ஈலிஸ் நகரை விட்டுக் கிளம்பி மைசீனை நோக்கி நடந்து சென்றான். அவனுக்கு நண்பனாயிருந்த பைலியஸும் தந்தையின் கட்டளைப்படி அந்நாட்டைத் துறந்து வெளியேறினான்.


ஆனால், பிற்காலத்தில் ஹெர்க்குலிஸ், இந்த நிகழ்ச்சிகளை மறக்காமல், ஆஜியஸைத் தாக்கி, அவனைத் தன் வாளுக்கு இரையாக்கிவிட்டான் என்று அவனைப் பற்றிய கதைகள் கூறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/46&oldid=1033800" இலிருந்து மீள்விக்கப்பட்டது