பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

45

யில் அவன் மூச்சுத் திணறி, மிகுந்த முயற்சி செய்து தன் கதையால் அவற்றுள் சிலவற்றை அடித்துத் தள்ளினான். அப்போழுது அவன் இருந்த நிலையை அறிந்த அதீனா தேவி, மீண்டும் அவன் முன் தோன்றித் தன்னுடைய தெய்விகக் கேடயத்தை அவனுக்குக் கொடுத்து உதவினாள். அந்தத் தங்கக் கேடயத்தைக் கொண்டு அவன். பறவைகள் தன்னைத் தாக்க முடியாதபடி காத்துக்கொண்டு, வாளாலும், கதையாலும் அவற்றை எதிர்த்து மாறி மாறி நெடுநேரம் போராடினான். அவை பெரும்பாலும் மடிந்து வீழ்ந்தபின், அவன் மீண்டும் பித்தளைத் தகடுகளை

எடுத்து, தன் முழு வல்லமையையும் பயன்படுத்தி, காடும் மலையும் அதிரும்படி அவற்றை இடைவிடாமல் தட்டத் தொடங்கினான். மறுபடி அவன் அம்புகளை எய்தான். இடையிடையே கதையையும் சுழற்றி வீசினான். அதற்குப் பின்புதான் பறவைகள் யாவும் அந்த வனத்தை விட்டகன்றன. உயிருள்ள ஒரு பறவை கூட அங்கே எஞ்சி நிற்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/49&oldid=1033804" இலிருந்து மீள்விக்கப்பட்டது