பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ஹெர்க்குலிஸ்

களுக்குப் பரிசாக அளிக்கிறேன்!” என்று சொல்லி, அவள் அதைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள். அவள் கையாலேயே வாங்கிக்கொள்வதில் அவனும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். அது போர்க்கடவுளால் அவளுக்குப் பரிசாக அளிக்கப் பெற்றது. கண்னைப் பறிக்கும் ஒளியுடன், பல நிறங்களில் கற்கள்மின்னவும், தங்கம் ஒளி வீசவும்

எழிலோடு விளங்கிய அந்த அரிய ஆபரணத்தை நாகரிகம் தெரியாத யூரிஸ்திஸிடம் கொடுக்க வேண்டியிருக்குமே என்றுதான் ஹெர்க்குலிஸ் வருந்தினான். பிறகு அவன், இராணியிடம் அரிதில் விடை பெற்றுக்கொண்டு கப்பலுக்குத் திரும்பினான்.

பின்னர் ஒரு முறை ஹிப்போலிதையும் அவனுடைடைய கப்பலுக்குச் சென்றிருந்தாள். ஹீரா தேவியின் சூழ்ச்சியால், அமெசான்கள் பலர், ஹெர்க்குலிஸ் தங்கள் இராணியைப் பிடித்துக் கப்பலில் ஏற்றிக் கிரீஸ் நாட்டுக்குக் கொண்டுசெல்லப் போகிறான் என்று கேள்விப்பட்டு, கப்பலை நோக்கி வந்து, அம்புகளை ஏவத் தொடங்கினர். சிரேக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/60&oldid=1074323" இலிருந்து மீள்விக்கப்பட்டது