பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ஹெர்க்குலிஸ்

ஒன்றைப் பிடித்துப் பலியிட்டான். மாடுகளின் காவற்காரன் அதைக் கண்டு ஹெர்க்குலிஸைச் சண்டைக்கிழுத்தான். ஹெர்க்குலிஸ், அவனை ஒரு கையால் மேலேதூக்கி, தன் விரல்களால் அவனுடைய நெஞ்சின் எலும்புகளை ஒடிக்கத் தொடங்கினான். அந்தநேரத்தில், புளுட்டோவின் இராணியான பெர்சி டோனி, அாண்மனையிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். ஹெர்க்குலிஸைக் கண்டதும் அவள் அவனை வரவேற்று காவற்காரனை உயிருடன் விட்டு விடும்படி கேட்டுக் கொண்டாள். அவ்வாறே ஹெர்க்குலிஸ் அவனைக் கீழே எறிந்துவிட்டு, இராணியுடன் அரண்மனைக்குள்ளே சென்று, பாதாள உலக மன்னனான புளுட்டோவைக் கண்டான்.


வாழ்க மன்னா நான் அரசன் பூரிஸ்தியஸின் ஆணையின்மேல் இங்கு வந்திருக்கிறேன். உன்னிடமுள்ள ரெரிபரஸ் நாயைக் கொண்டு செல்ல அநுமதிக்க வேண்டும்! என்று அவன் புளுட்டோவிடம் கேட்டான்.


புலூட்டோ, ‘ஹெர்க்குலிஸ் ! நீ மகா வீரன் என்று மட்டும் நான் இதுவரை கேள்விப்பட்டிருந்தேன். இப்பொழுது நீ ஒரு பைத்தியக்காரன் என்றும் தெரிகிறது! அந்த முத்தலை நாயைக் கொடுத்துவிட்டால், பிறகு இங்கே காவல் காப்பது யார்? என்று கேட்டான்.


மன்னவா! உனக்குப் பணி செய்ய இங்கே எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் தன்னந்தனியாக என் பணிகளை நிறைவேற்றி வருகிறேன். தேவாதி தேவனாகிய என் தந்தையாகிய யேஸ் கடவுளின் கட்டளைப்படியே நான் யூரிஸ்தியஸுக்குத் தொண்டு செய்கிறேன். இதுவரை பதினொரு பணிகளை நிறைவேற்றிவிட்டேன். இது இறுதிப் பணி. என் பணிக்காக நான் உலகின் பல பாகங்களைச் சுற்றி வந்துவிட்டேன். அகரன் அட்லஸ் சுமந்துகொண்டிருக்கும் வான மண்டலத்தை நானும் சுமந்து பார்த்துவிட்டேன். இப்பொழுது, நரக வாயிலைக் காத்து நிற்கும் நாயைக் கொண்டு வா! என்று எனக்குக் கட்டளையிட்டிருப்பதால், அதை நான் எப்படியாவது கொண்டுசெல்ல வேண்டும். அல்லது நான் இங்கேயே மடிய வேண்டும்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/74&oldid=1074328" இலிருந்து மீள்விக்கப்பட்டது