பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

ஹெர்க்குலிஸ்


மறுநாள் காலையில் அல்க்மினா, அறிவாளரான ஒரு பெரியவரிடம் சென்று, தன் மைந்தனுடைய வைபவத்தைப்பற்றித் தெரிவித்தாள். பத்து மாதக் குழந்தையான ஹெர்க்குலிஸ், இரண்டு கொடிய நாகங்களை வெறும் கைகளாலேயே நெரித்துக் கொன்ற அதிசயத்தின் பொருள் என்ன என்று அவள் அப்பெரியவரிடம் கேட்டாள். அவர் சிறிது நேரம் ஆலோசனை செய்து கூறியதாவது: “உன் மகன் ஹெர்க்குலிஸ் மகா வல்லவனாக விளங்குவான். அவனுக்கு ஈடாகவோ, மேலாகவோ எந்த மனிதனும் இருக்க முடியாது. அவன் அரும்பெரும் செயல்கள் பன்னிரண்டில் வெற்றி பெற்று, பின்னால் ஒலிம்பிய மலையில் தேவர்களுடன் தானும் ஒரு தேவனக வாழ்ந்து வருவான்.’


இதற்குப் பின்னால் அவள் ஹெர்க்குலிஸைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தாள். அவன், குழந்தைப் பருவத்திலேயே உடல் பருத்து, மிகுந்த வலிமையுடன் விளங்கினான். இளமையிலிருந்தே அவனுக்கு வில்வித்தை மல்யுத்தம், ஈட்டி எறிதல், வாள் போர் முதலியவைகளைத் தேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்து வந்தார்கள். ஜேஸன் முதலிய புகழ்பெற்ற அரசிளங்குமரர்கள் பயிற்சி பெற்று வந்த ஆசிரியர் கிரான் என்பவரின் பள்ளியிலும் அவன் பல ஆண்டுகள் கற்று வந்தான் முரட்டுக் குதிரைகள் பூட்டிய தேர்களை ஓட்டுவதிலும் அவன் பயிற்சி பெற்று வந்தான். சிறு தேரின்மீது நின்றுகொண்டே குதிரையை ஓட்டிப் பந்தயங்களுக்குச் செல்வது கிரீஸ் நாட்டில் வழக்கம். ஹெர்க்குலிஸ் எந்தக் குதிரையையும் அடக்கிச் செலுத்துவதில் திறமை பெற்று விளங்கினான். இரவு நேரத்தில் அவன் அரசனுக்கு அருகில் ஒரு கட்டிவில் படுத்து உறங்குவது வழக்கம். அவனுடைய வீரத்திற்கு அறிகுறியாக, அந்தக் கட்டிலின்மீது ஒரு சிங்கத்தின் தோல் விரிக்கப்பெற்றிருக்கும்.


காளைப் பருவத்தில் ஒரு சமயம், ஹெர்க்குலிஸ் மலைகளில் ஏறி, அங்கிருந்த மலைவாசிகளுடன் ஆசித்து வந்தான். அப்பொழுது ஒரு நாள், வெயிலின் கொடுமையால் அவன் களைப்புற்று, ஒரு மரத்தடியில் படுத்திருந்தான். சிறிது நேரத்தில் அவன் கண்ணயர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/8&oldid=1074293" இலிருந்து மீள்விக்கப்பட்டது