பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ஹெர்க்குலிஸ்


ஹெர்க்குலிஸின் படைவீரர்கள் யாகசாலையிலிருந்து சிறிது தூரத்தில் வருந்திக்கொண்டே நின்றார்கள். அந்த நேரத்தில் அவன் அருகில் செல்ல எவரும் துணியவில்லை. ஹெர்க்குவிஸ், தன் மைந்தன் ஹில்லஸைக் கூவி அழைத்து, தன்னை அடிவாரத்தில் அமைதியான ஓரிடத்தில் கொண்டுபோய் விடும்படி கேட்டுக்கொண்டான். அவ்வாறே அவனைப் பல வீரர்கள் சேர்ந்து மலையடிவாரத்திலே கொண்டு போய் வைத்தனர். அப்பொழுது ஹெர்க்குலிஸை அழைத்து தன்னுடைய தாய் அல்க்மினாவையும், தன் குமாரர்கள் அனைவரையும். மகளையும் அங்கே வரவழைத்து, தான் அவர்களுக்குத் தன்னுடைய இறுதிச் செய்தியைக் கூற வேண்டுமென்று ஆசைப்படுவதாகக் கூறினான். ஹில்லஸ் தன் பாட்டியாரான அல்க்மினா டைரின்ஸ் நகரில் தன் சகோதரர்களை வைத்துக்கொண்டு தங்கியிருப்பதாகத் தெரிவித்தான். அத்துடன் தன் தாய் தியனைரா, ஹெர்க்குலிஸுக்கு நேர்ந்த விபத்தை அறிந்து தன் உயிரையும் துறந்துவிட்டாள் என்று செய்தி வந்திருப்பதாயும் அவன் கூறினான். அதுவரை ஹெர்க்குவிஸ் அவளைப் பற்றி நெஞ்சிலே குமுறிக்கொண்டிருந்தான். ஹில்லஸ் கூறிய வார்த்தைகளிலிருந்து அவனுக்ரும் சிறிது ஆறுதல் ஏற்பட்டது.


அப்பொழுது ஹெர்க்குலிஸ், சீயஸ் தேவர் ஆதியிலே தீர்க்க தரிசனத்துடன் கூறியிருந்த வாக்கைத் தன் மகனுக்கு எடுத்துச் சொன்னான்: ‘உயிருள்ள எந்த மனிதனும் ஹெர்க்குலிஸை எந்தக் காலத்திலும் கொல்ல முடியாது இறந்து போன பகைவன் ஒருவனே, அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணமாயிருப்பான்!’


பின்னர்த் தன்னுடைய தகனக்கிரியைபற்றியும் அவன் மகனுக்குச் சொல்ல வேண்டிய விவரங்களைச் சொல்லி முடித்தான். அவனுடைய கட்டளைப்படி சிந்தூர மரக்கட்டைகளும், தேவதாரு மரக்கட்டைகளும் அடுக்கப்பட்டன. அயோலஸ் முதலிய உறவினர்கள் காட்டத்திலிருந்து சற்று விலகி நின்றுகொண்டனர். ஹெர்க்குலிஸ் தானாகவே அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு, யாராவது ஒருவர் காட்டத்தின் ஒரு மூலையிலே தீ முட்டும்படி வேண்டினான். அங்கே-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/82&oldid=1074331" இலிருந்து மீள்விக்கப்பட்டது