பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

5

விட்டான். உறக்கத்தின் நடுவில், கனவிலே அவன் சில காட்சிகளைக் கண்டான். முதலில் ஒரு நெடிய சாலையும், அதன் முடிவில் அழகிய மாளிகைகள் நிறைந்த ஒரு பெரிய நகரமும் தென்பட்டன. மற்றொரு புறத்தில் மலைமீது செல்லும் ஒரு பாதை தெரிந்தது. ஹர்குலிஸ் தனக்கு முன்பு தோன்றிய இரண்டு பாதைக்களில் எதிலே செல்லலாம் என்று யோசிக்கலான். அப்பொழுது நகரப் பாதையில் ஓர் இளம் பெண் தோன்றி, அவனைக் கூவி அழைத்தாள். ‘இந்தப் பாதையில் வந்து நீ நகரத்தை அடைந்து இன்பமாக வாழலாம். இது இசையும் கலைகளும் நிறைந்த நகரம். சுகமாக வாழ்வதில் உனக்கு விருப்பமிருந்தால், நீ இந்தப் பக்கமாக வருவாயாக!’ என்று அவள் கூறினாள். அவன் திகைத்து விழிப்தைக் கண்டு, அவள் அவனை மேலும் உற்சாகப்படுத்திப் பேசினாள்: ‘இந்த நகரில் நீ, ஒரு வேலையும் செயாயாமல், இன்பமாக வாழலாம்: புழுதியில் நிற்க வேண்டியதில்லை; வெயிலில் வாட வேண்டியதில்லை. மலர்கள் நிறைந்த பூந்தோட்டங்களில் நீ பொழுதைப் போக்கலாம்: எந்த நேரத்திலும் யாழும் வீணையும் வாசிக்கக் கேட்கலாம். மாட மாளிகைகள் நிறைந்த, இந்நகருக்கு ஈடே கிடையாது!’


அவள் இவ்வாறு பேசும்பொழுதே நகரிலிருந்து இனிய இசை வருவதை ஹெர்க்குலிஸ் கவனித்துக் கேட்டான். அது அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. நகரின் நந்தவனங்களும், சோலைகளும், அங்கிருந்து வந்த இளந்தென்றலும் அவனைக் கூவி அழைப்பவை போல் இருந்தன. அவனுக்கு நகரைப்பற்றிய ஆவலும் தோன்றிற்று.


அதே சமயத்தில் மலைப்பாதையில் வேறொரு நங்கை நிற்பதையும் அவன் கண்டான். முதலில் கண்ட நங்கையைப் போலில்லாமல் அவள் முற்றிலும் மாறுபட்டிருந்தாள். அவள் துாய வெண்மையான ஆடைகளை அஎனிந்திருந்தாள். அவளுடைய கண்களில் சோகம் இருப்பினும், அவை வீரச் சுடருடன் மின்னிக் கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/9&oldid=1074294" இலிருந்து மீள்விக்கப்பட்டது