பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

37



செய்வாயோ? தமிழ்க்குலமே! இனவழிப்பட்ட தேசிய உணர்ச்சிக்கு என்றென்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய்த் திகழும் வங்க நாட்டு அறிஞர் ஒருவர் நம் தமிழ்த் திருநாட்டு வரலாற்றில் வைர எழுத்துக்களால் பொறிக்கப் பெற வேண்டிய வேலூர்ப் புரட்சி பற்றி விளம்பியுள்ள மணிவாசகம் இதோ:

"வேலூர்ப் புரட்சி இந்தியச்சிப்பாய்களின் பெரும்புரட்சியைப் போல ஒர் இலட்சுமி பாயையோ அசிமுல்லா கானையோ அறிமுகப் படுத்தவில்லை. ஆனால், இதனால் அதன்பெருமை எவ்வகையிலும் குறையுடையதன்று. அப்புரட்சியில் பங்கு கொண்ட, பேரும் வேண்டாத் தன்னலமற்ற அத்தியாகிகளே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதன்முதல் இராணுவப் புரட்சி புரிய வழி காட்டிய வல்லாளர்கள். பெருமை மிக்க அவர்களுடைய திருமரபைப் பின்பற்றியே பல்லாயிரக் கணக்கான மக்கள் சுதந்தரத்தைப் பெற்றுள்ளார்கள். விடுதலை பெற்ற இந்தியா அவர்களை என்றும் மறவாது போற்றித் தன் வீர வணக்கங்களை நன்றியுடன் நாளும் உரிமையாக்கும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/39&oldid=1138862" இலிருந்து மீள்விக்கப்பட்டது