பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2



சுடரும் சோதியும்


முன்னுரை :

இந்திய அரசாங்கத்தின் ஆதரவில் டாக்டர் சுரேந்திரநாத்துசென் அவர்களால் வரையப்பெற்று, மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாதின் முன்னுரையுடன் தில்லியிலிருந்து அண்மையில் வெளி வந்துள்ள '1857' என்ற ஆராய்ச்சிப் பெருநூல், 'சிப்பாய் புரட்சிக்கு வித்திட்டது வேலூர்ப் புரட்சியே,’ என்று சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறே இலண்டன் மாநகரிலிருந்து புறப்பட்டு உலகெங்கும் சுற்றும் தி லிசனர்' (The Listener) என்ற அரிய வார இதழின் 1957-ஆம் ஆண்டு மே மாத 28-ஆம் நாள் வெளியீடு, ஒரு நூற்றாண்டிற்கு முன் நடைபெற்ற வட விந்தியசிப்பாய் புரட்சியின் அடிப்படை அப்புரட்சி நடைபெறுவதற்கு ஐம்பத்தோர் ஆண்டுகட்குமுன்பே தமிழகத்தில் நடைபெற்ற வேலூர் புரட்சியில் புதைந்து கிடப்பதைப் புலப்படுத்துகிறது. வேலூர்ப் புரட்சியின் தனிச் சிறப்பைப் புலப்படுத்தும் வகையில், டாக்டர் சென் அவர்களின் ஆராய்ச்சி நூல் எடுத்த எடுப்பிலேயே-முதல் இயலிலேயே-'காரணங்கள்' என்ற தலைப்பில் வேலூர்ப் புரட்சியைப்பற்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/40&oldid=1138864" இலிருந்து மீள்விக்கப்பட்டது