பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

1806



சன் 'பகதூர் ஷாவை அரியணையில் அமர்த்துவோம்' என்பதே புரட்சியாளரின் ஆவேச முழக்கமாய் விளங்கியது. கொழுப்புத் தடவிய தோட்டாக்களைப்பற்றிய மத சம்பந்தமான உணர்ச்சி, 1857ல் நடைபெற்ற புரட்சியை ஆட்கொண்டது; புரட்சிக்கு இறுதித் தூண்டுகோலாய் அமைந்தது. அவ்வாறே வேலூர்ப் புரட்சியும், தோலாலாகிய குல்லாய்ச் செண்டுகள் தரிப்பதைப்பற்றிய பிரச்சினையிலேயே இறுதியாக வெடித்தெழுந்தது. ஆனால் இவ்விரு பெரும்புரட்சிக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளையும் நாம் உணர வேண்டும். வேலூர்ப் புரட்சி பின்னாளில் மூண்ட பெரும்புரட்சியைப் போல நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பரவி இலட்சக்கணக்கான மக்களைச் சுதந்தரப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லும் போராக உருக்கொள்ளவில்லை. மேலும், அப்புரட்சியின் பெருமை வெள்ளைச் சரித்திர ஆசிரியர்களாலும் அதிகாரிகளாலும் ஏதோ ஒரு சின்னஞ்சிறு உதிரிச் சம்பவமாக-மத உணர்ச்சிகள் காரணமாகத் தோன்றி மறைந்த சிறு நிகழ்ச்சியாக-ஒதுக்கி ஒளிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாகிய ஒரு முக்கிய உண்மை என்னவென்றால், வடவிந்தியச் சிப்பாய்களின் பெரும்புரட்சி நடைபெற்றபோது, இங்கு ஒரு பெருந்தொழிற்புரட்சியைக் கண்ட திருநாடாய்த் திகழ்ந்ததே. வெள்ளையர் வாணிபத்தில் அந்நாட்டில் உற்பத்தியான பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/48&oldid=1638441" இலிருந்து மீள்விக்கப்பட்டது