இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
DIALOGUE I
௧-ம்.சம்பாஷணை.
TO ENQUIRE AFTER ONE'S HEALTH
ஒருத்தனுடைய சுக செய்தியை யறிகிறது.
Good Morning Sir,
காலை வந்தனமையா.
How do you do this Morning,
நீர் இன்று காலமே யெப்படி யிருக்கிறீர்?
Very well thank God,
சுவாமி கிறுபையினாலே சுகமாயிருக்கிறேன்.
I am glad to hear it,
நான் அதை கேட்க சந்தோஷப்படுகிறேன்.
How doth the Gentleman your brother do,
உம்முடைய சகோதரனாகிய துரை சுகமாயிருக்கிறாரா?
Not very well,
மெத்த சுகமில்லை.
I am sorry to hear it,
அதை கேட்க விசனப்படுகிறேன்.
Is he in good health,
அவர் சுகமாயிருக்கிறாரா
Yes! he is in good health,
ஆம். அவர் சுகமாயிருக்கிறார்
How does your Sister do,
உம்முடைய சகோதரி யெப்படியிருக்கிறாள்?
She is ill of an ague,
அவள் குளிர் காய்ச்சல் நோவாயிருக்கிறாள்.
How are you,
நீர் எப்படியிருக்கிறீர்?
Walk in Sir,
உள்ளே நடவுமையா
I am your servant,
நான் உம்முடைய ஊழியக்காறன்.