பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

FAMILIAR DIALOGUES IN

Sir, as you were asleep, I was afraid that you would be angry with me if I awoke you.
நீர் நித்திரை பண்ணிக் கொண்டிருந்தபடியினாலே நான் தங்களையெழுப்பினால் கோபித்துக் கொள்ளப்போகிறீரென்று பயந்திருந்தேன் அய்யா.
Bring my clothes immediately.
இச்சிணத்திலே என்னுடைய உடுப்புகளைக் கொண்டு வா.
What coat sir will you put on?
நீரெந்தக் கோட்டை அணிந்துக் கொள்ளுவீரையா?
Bring the Black coat.
கறுப்புக் கோட்டைக் கொண்டு வா.
Is the Barber come?
அம்மட்டன் வந்தானா?
Sir, he has not come.
அவன் வரவில்லை அய்யா.
He is always late, tell him, if he does not come earlier in future I will discharge him..
அவன் எப்பொழுதும் நேரப்பட்டு வருகிறான் இனி மேலவன் சீக்கிரமாய் வரா விட்டால், அவனைத் தள்ளிப் போடுவேனென்று சொல்.
It is too late, I cannot wait for him..
மெத்தவும் நேரப்பட்டுப் போச்சுது. நான் அவனுக்காகக் கார்த்திருக்க மாட்டேன்.
Bring my Razor, Soap box and warm water and l will shave myself.
சவரக் கத்தியையும் சவுக்காரச் சிமிளும் வென்னீருங் கொண்டு வா. நான்தானே சவரம் பண்ணிக் கொள்ளுகிறேன்.
Here, they are ready Sir.
இதோ அதுகள் தயாராயிருக்குதையா.
Bring me a Gurglet of water and a towel.
எனக்கு ஒரு கூச்சா சலமும் ஒரு துவாலையும் கொண்டு வா.
This towel is dirty, bring me a clean one.
இந்த துவாலை அழுக்காயிருக்கின்றது சுத்தியாயிருக்கிறதொன்றைக் கொண்டு வா.
Tell the Washerman if he does not wash my clothes better, I shall employ another man.
என்னுடைய உடுப்புகளை நேத்தியாய் சலவை பண்ணாவிட்டால், வேறொருத்தனை அமத்திக் கொள்ளுவேனென்கிறதாக வண்ணானுக்கு சொல்லு.
Sir, it is time to go to the Fort.
கோட்டைக்குப் போற வேளையாச்சுதையா.