பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப்பாயிரம்

(௯)


செய்தாராதலின். முற்கூறிய நூல்கள் போல வெழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமு மயங்கக் கூறாது வேறோ ரதிகாரமாகக் கூறினாரென்றற் ‘கெழுத்து முறைகாட்டி’ யென்றார். வரைப்பின்கண்ணே தோற்றி நிறுத்தலென்க. இந்திரனாற் செய்யப்பட்டதைந்திரமென்றாயிற்று. ‘பல்புக’ழாவன - ஐந்திர நிறைதலு மகத்தியத்தின் பின்னிந்நூல் வழங்கச் செய்தலு மகத்தியனாரைச் சபித்த பெருந்தன்மையு மைந்தீ நாப்பணிற்றலு நீர் நிலை நிற்றலும் பிறவுமாகிய தவத்தான்மிகுதலும் பிறவுமாம். படிமை - தவவேடம். ‘வடவேங்கடந் தென்குமரி’யென்பது - கட்டுரை வகையா னெண்ணோடு புணர்ந்தசொற்சீரடி. ‘ஆயிடை’யென்பது வழியிசை புணர்ந்த சொற்சீரடி. ‘தமிழ்கூறு நல்லுலகத்’ தென்பது, முற்றடியின்றிக் குறைவு சீர்த்தாய சொற்சீரடி. இங்ஙனஞ் சொற்சீரடியை முற்கூறினார் சூத்திர யாப்பிற் கின்னோசை பிறத்தற்கு,

“பாஅவண்ணஞ் சொற்சீர்த் தாகி நூற்பா பயிலு”

மென்றலின்.

ஏனை யடிகளெல்லாஞ் செந்தூக்கு.

‘வடவேங்கடந் தென்குமரி’ யெனவே யெல்லையும், ‘எழுத்துஞ்சொல்லும் பொருளுநாடி’ யெனவே நுதலிய பொருளும் பயனும் யாப்பும், ‘முந்து நூல்கண்’டெனவே வழியும், ‘முறைப்பட வெண்ணி’ யெனவே காரணமும், ‘பாண்டியன வையத்’ தெனவே காலமுங் களனும், ‘அரிறபத்தெரிந்’ தெனவே கேட்டோரும், ‘தன்பெயர் தோற்றி’ யெனவே யாக்கியோன் பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன.

தொல்காப்பியமென்பது மூன்றுறுப் படக்கிய பிண்டம். பொருள்கூறவே யப்பொருளைப் பொதிந்த யாப்பிலக்கணமு மடங்கிற்று. நூறு காணங் கொணர்ந்தானென்றாலவை பொதிந்த கூறையுமவையென வடங்குமாறு போல. இனியிவ்வாறன்றிப் பிறவாறு கண்ணழிவு கூறுவாரு முளராலெனின் வேங்கடமுங் குமரியு மெல்லையாகவுடைய நிலத்திடத்து வழங்குந் தமிழ் மொழியினைக் கூறு நன்மக்கள் வழக்குஞ் செய்யுளுமென்றாற் செந்தமிழ் நாட்டைச்சூழ்ந்த கொடுந் தமிழ்நாடு பன்னிரண்டினும் வழங்குந் தமிழ் மொழியினைக் கூறுவாரை நன் மக்களென்றாரென்று பொருடருதலானு மவர்கூறும் வழக்குஞ்செய்யுளும் கொண்டெழுத்துஞ் சொல்லும் பொருளு மாராய்தல் பொருந்தாமையானு மவர்கூறும் வழக்குஞ் செய்யுளுமாகிய விருகாரணத் தானு மெழுத்துஞ் சொல்லும் பொருளுமாராய்ந்தாரெனின் அகத்தியர்க்கு மாறாகத் தாமு முதனூல் செய்தாரென்னும் பொருடருதலானு,மங்ஙனங் கொடுந்தமிழ் கொண்டிலக்கணஞ் செய்யக் கருதிய வாசிரியர் குறைபாடுடையவற்றிற்குச் செந்தமிழ் வழக்கை