௨
தொல்காப்பியம்.
எழுத்ததிகாாம்,
முதலாவது
நூன்மரபு
⬤ ✽ ⬤
எழுத்தெனப் படுப,
வகரமுத னகரவிறு வாய்முப் பஃதென்ப,
சார்த்து வரன்மரபின் மூன்றலங் கடையே.
- என்பது சூத்திரம்.
இவ்வதிகார மென்ன பெயர்த்தோவெனின் எழுத்துணர்த்தினமை காரணத்தா னெழுத்ததிகாரமென்று பெயராயிற்று. எழுத்தையுணர்த்திய வதிகாரமென விரிக்க. அதிகாரம் - முறைமை.
எழுத்துணர்த்தமிடத் தெனைத்துவகையா னுணர்த்தினாரோ வெனின் எட்டுவகையானு மெட்டிறந்த பல்வகை யானும் உணர்த்தினார்.
எட்டுவகையாவன - எழுத்தினைத்தென்றலு மின்னபெயரினவென்றலு மின்னமுறையின வென்றலு மின்னவளவின வென்றலு யின்ன பிறப்பின வென்றலு யின்ன புணர்ச்சியின வென்றலு மின்னவடிவின வென்றலு மின்ன தன்மையின வென்றலுமாம். இவற்றுட்டன்மையும் வடிவு நமக்குணர்த்த லாகாமையி னாசிரிய ரீண்டுரைத்திலர் - ஏனைய விதனுட் பெறுதும்.
எழுத்தினைத்தென்றலைத் தொகை வகை விரியானுணர்க. முப்பத்து மூன்றென்றல் தொகை; உயிர்பன்னிரண்டு முடம்பு பதினெட்டுஞ் சார்பிற் றோற்ற மூன்று மதன்வகை; அளபெடையேழு முயிர்மெய்யிருநூற் றொரு பத்தாறு மவற்றொடு கூட்டி யிருநூற்றைம்பத்தாறென்றல் விரி.
இனி எழுத்துகளது பெயரு முறையுந் தொகையு மிச்சூத்திரத்தாற் பெற்றாம். வகை ஒளகாரவிறுவா யென்பதனானும், னகர விறுவாயென்பதனானும் , அவைதாங் குற்றியலிகரங் குற்றியலுகர மென்பதனானும், பெற்றாம்.
விரி- குன்றிசைமொழிவயி னென்பதனானும், புள்ளியில்லா வென்பதனானும், பெற்றாம்.
அளவு - அவற்றுள், அ - இ - உ - என்பதனானும், ஆ-ஈ-ஊ - என்பதனானும், மெய்யினளவே யென்பதனானும், அவ்வியனிலையு மென்பதனானும், பெற்றாம்.
பிறப்பு, பிறப்பியலுட்பெற்றாம்.
புணர்ச்சி - உயிரிறு சொன்மு னென்பதனானும், அவற்று ணிறுத்த சொல்லி