(௰௨)
நூன்மரபு
னென்பதனானும், பிறவாற்றானும் பெற்றாம்.
இனி எட்டிறந்தபல்வகையாவன- எழுத்துக்களது குறைவுங் கூட்டமும் பிரிவு மயக்கமு மொழியாக்கமு நிலையு மினமு மொன்றுபலவாதலுந் திரிந்ததன் திரிபது வென்றலும் பிறிதென்றலு மதுவும்பிறிதுமென்றலு நிலையிற்றென்றலும் நிலையாதென்றலு நிலையிற்று நிலையாதென்றலு மின்னோரன்ன பலவுமாம்.
குறைவு - அரையளவு குறுகல், - ஓரளபாகு,மென்பனவற்றாற் பெற்றாம்.
கூட்டம் மெய்யோடியையினும், புள்ளியில்லா, என்பனவற்றாற் பெற்றாம்.
பிரிவு - மெய்யுயிர் நீங்கினென்பதனாற் பெற்றாம்.
மயக்கம் - டறலள என்பது முதலாக மெய்ந்நிலை சுட்டினென்ப தீறாகக் கிடந்தனவற்றாற் பெற்றாம்.
மொழியாக்கம் - ஓரெழுத்தொருமொழி யென்பதனாற் பெற்றாம்.
நிலை - பன்னீருயிரும், உயிர்மெய்யல்லன, உயிர்ஔ, ஞணநமன, என்பனவற்றான் மொழிக்கு முதலாமெழுத்து மீறாமெழுத்தும் பெற்றாம்.
இனம் - வல்லெழுத்தென்ப, மெல்லெழுத்தென்ப, இடையெழுத் தென்ப, ஒளகாரவிறுவாய், னகரவிறுவாய், என்பனவற்றாற் பெற்றாம். இவற்றானே யெழுத்துக்களுருவாதலும் பெற்றாம்.
இவ்வுருவாகிய வோசைக் கிவ்வாசிரியர் வடிவு கூறாமையுணர்க. இனி வரிவடிவு கூறுங்கால் மெய்க்கே பெரும்பான்மையும் வடிவு கூறுமா றுணர்க.
ஒன்று பலவாதல் - எழுத்தோரன்ன, வென்பதனாற் பெற்றாம்.
திரிந்ததன் றிரிபது வென்றல் - தகரம் வருவழியென் பதனானும் பிறாண்டும் பெற்றாம்.
பிறிதென்றல் - மகரவிறுதி, னகாரவீறு என்பனவற்றாற் பெற்றாம்.
அதுவும்பிறிதுமென்றல் - ஆறனுருபினகரக்கிளவி யென்பதனாற் பெற்றாம்.
நிலையிற்றென்றல் - நிறுத்த சொல்லினீறாகென்பதனாற் பெற்றாம்.
நிலையாதென்றல் - நிலைமொழியதீற்றுக்கண்ணின்றும் வருமொழியது முதற்கண்ணும் புணர்ச்சி தம்முனிலவாதல். அது, மருவின்றொகுதியென் பதனாற் பெற்றாம்.
நிலையிற்று நிலையாதென்றல்- குறியதன் முன்னருமென்பதனாற் கூறிய அகரம் இராவென் கிளவிக்கில்லை யென்பதனாற்பெற்றாம்.
இக்கூறியவிலக்கணங்கள் கருவியுஞ் செய்கையுமென விருவகைய. அவற்றுட் கருவி-புறப்புறக்கருவியும் புறக்கருவியும் அகப்புறக்கருவியும் அகக்கருவியுமென நால்வகைத்து.
நூன்மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவி.
மொழிமாபு- புறக்கருவி.
புணரியல் அகப்புறக்கருவி.
எகர ஒகரம் பெயர்க்கீறாக வென்றாற் போல்வன அகக்கருவி.
இனிச்செய்கையும் - புறப்புறச்செய்கையும் புறச்செய்கையு மகப்புறச் செய்கையும் அகச்செய்கையுமென நால்வகைத்து. எல்லாமொ