இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
சிறப்புப்பாயிரம்
விளங்குயர் சைவ விசிட்டாத் துவிதக்
களங்கமின் முடிவிற் கருத்துடைப் புனித
னியலிசை நாடக மெனுமுத் தமிழு
மயலறத் தெரிந்த மாட்சிகொள் புலவன்
விரிவுரை செயத்தகு மீக்கூர் மதியுளோ
னவையின் மற்றொரு வரடுத்துரை செயாமற்
சுவையுறு மொழிபல சொன்மொழி வல்லோன்
உத்தர மொழிமற் றுறுதிசை மொழியின்
சத்திஃ தெனவே தடையறத் தெரிந்தோ
னென்னிரு கண்ணினு மிதையமென் மலரினு
துன்னியெக் காலமுந் துலங்கிவாழ் தோன்றல்
நல்லன வுளவெலா நசையொடு நடாத்தி
யல்லன வுளவெலா மகலுற வகற்றி
மகிமை பெறுமகா லிங்கைய னென்ன
புகலறு மியற்பெயர் பொருந்துநா வலனே.
இஃது
கைலாச பரம்பரையாய் விளங்காநின்ற
திருவாவடுதுறையாதின வித்துவான்
தாண்டவராயசுவாமிகள்
இயற்றியது.