பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவ-சிதம்பரத்திற்குத் தண்டனை


"ஏதிவண் நிகழினும் இளைத்திடேல்" என்றுபின் இயம்பிய *பின்னிமுன் ஏகினேம். அவன் தான் நயம்படப் பற்பல நாளா வெழுதி வந்த தீர்ப்பினை மனங்கொண் டெடுத்துச் சிந்தை மகிழ்ந்திடச் சிலமணி படித்துச் சிவம்பிர சங்கம் செய்ததற்காகத் தவம்புரி யும்படி தசநல் வருடம் தீவென வியம்பினான். தீங்கிலேன் அவற்குத் தரவில் உதவியைத் தந்ததற் காக இருபது வருடமும், இயம்பிய நெல்லையில் ஒருபிர சங்கம் உரைத்ததற் காக மற்றோர் இருபது வருடமும் தீவெனக் கற்றோர் மனமும் கலங்கிடச் சொன்னான். இறையும் கலங்கா தென்னுளம் கவர்ந்துள இறையின் கொடையென ஏற்றேன். ஆயினும் நீதியை நினைந்து நெஞ்சொடு நகைத்தேன். ஆதியிற் செய்ததின் றடுத்ததென் றுன்னினேன். கனமணி மாடியில் காத்திருந் தோம். பின் ஜனமெலாங் கலைத்துச் சார்ந்தனர் போலிஸார்.

•பின்னி - A.F.Phinhey

102


102