பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மனைவி மக்கள் மனவருத்தம்


சென்றேம் சிறைக்கு, செல்வழி கோவில்முன்
நின்றார் என்பிதா நேர் பெரிய மைத்துனன்.
“கவலற்க" என்றேன். “ கடவுள் இருக்கிறார்.
கவலற்க" நீயெனக் கழறினன் * தந்தை.
என்முன் மகனை என்முன் கண்டிலேன்.
என்பின் மகனை என் பெரிய மைத்துனன்
எடுத்துவைத் திருக்க என்கண் கண்டதும்
அடுத்தது கண்ணீர் அடக்கினேன் வலியால்.
என்குடி லின்மேல்நின் றியம்பிய மாது
தன்கணீர் உகுத்துத் தலையிற்கை வைத்து
மிகமிக அழுதனள். 4 வேண்டாம் அழுகை :
மகவைப் பேணென வண்டியில் இருந்தயான்
கையால் பேசினேன். கண்டனள் அவளும்
மையால் என்னுயிர் மனைவி குடிலினுள்
விழுந்து வருந்தி மிகவும் துயரினுள்
அழுந்திய தாக அறைந்தனன் ஒருவன்.
சென்றேம் சிறைக்குள். டிப்டி ஜயிலரும்
நின்றார் சிலரும் நெருக்கிவந் தழுதனர்.
“ நினைத்த படியே நிகழ்த்தினன் தீர்ப்பு :
மனத்துயர் நீக்குமின் வலியினால் " என்றேன்.
செப்பிய ஜெயிலரும் சிந்திமிகக் கண்ணீர்
அப்பா ! நீ இனி அயரேல் என்றான்.
" அயர்தல் என்றும் அணுகா தென்னை :
உயர்தல் ஒன்றே ஒன்றும் என்றேன்




தந்தை- நூலாசிரியர் தந்தை உலகநாத பிள்ளை ,
t மையால் - மதிமயக்கத்தால்,
40
109

 

103