பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

 காலுக்குக் கரும்பொற் கழலணி!


தந்தான் வலது கால் தண்டைகள் எமக்கே :
அரும்பொன் காலிடல் அபசார மாதலால்
இரும்பினை அணியுமென் றீந்ததைப் போன்றே.
கொண்டதும் அதனைக் கூறா தொன்றும்
அண்டைத் திண்ணையில் அமர்ந்தென் நண்பன்
படுத்தான். யான்சுயம் பாடிக்கொண் டுலாவினேன்.
அடுத்திட மாலை அவனெழுந் திருந்து
“சித்தம் மயங்கித் திடீரெனப் படுத்தேன்.
இத்துணை நேரமும் எதையும் அறிந்திலேன்."
எனவுரை செய்தான் என்மனங் கலங்கிட
" கனவரை போன்றோய்! காணா ததனைச்
சும்மா இருந்தேன் சுகமா உறங்குதல்
உம்மாண் உடற்களை ஒழிக்குமென் றெண்ணியே :
மயங்கா நின்னுளம் மயங்கிய தென்னில்,
மயங்கிய என்னுளம் மாயுமே" என்றேன்
அக்கணம் ஜெயிலர் அவ்விடம் வந்தெமை'
இக்கணம் *ஆஸ்பிற்றல் ஏகுவோம்' என்றான்.
நடந்தேம் மூவரும் நலனிறை டிரார்
நடந்ததற் கிரங்கி நன்மொழி கூறி
எம்மின் எடையை எடுத்தனன். பின்னவர்
தம்மாண் மனத்தொடு “ தக்கோய்! பாலுமக்
கனுப்புவேம் நன்றா அருந்துக" என்றுபின்
அனுப்பினர். பால்மிக அருந்தினேம் இருவரும்.



ஆஸ்பிற்றல் - ஆஸ்பத்திரி.
108

 

106