பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/113

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

கோயம்புத்தூர்ச் சிறை செல்லல்


கோயமுத்தூர் கொண்டு போவதாச்
சாயங் காலமே சாற்றிடக் கேட்டதால்,
சிவத்தை வணங்கிச் செப்பியும் வழியில்
தவத்துயர் நாதனைத் தரிசனை செய்தும்
கேட்டண்டை வரவும் கேட்டைத் திறந்தனர்.
ஏட்டுமுதல் பெரியவர் எண்ணிலார் வந்தனர்,
வெடிகள் கைக்கொண்டு மிகமிக நெருங்கி
கடிதில்யான் வண்டியில் காலெடுத்து வைக்கவும்.
நண்ணினேன் கோவில்முன். நவின்றவென் மாதுலன்
கண்ணீர் பெருக்கிக் " காண்பதென்" றென்று

  • நெருநல் நுமக்குநீர் நிகழ்த்திய படிஅவர்

நெருநலே இவ்விடம் நீத்தனர் என்றான்.
நன்றென வணங்கி நானவர் விடுத்தேன்.
அன்றுவழி யெங்கும் அழுகையே கண்டேன். !
சடகோப சாரியார் தங்கிய இடத்தின் முன்
திடனெலாம் நீங்கச் சென்றுகொண் டிருந்தவென்
மைத்துனனைக் கண்டேன். * மயங்கிடேல்"
                                        என்றேன்.
அத்தருணம் வெங்கு வையர் ஆதியோர்
“விரைவினில் உம்மை மீட்டுவோம்' என்றனர்.
விரைவிலென் வண்டி வெகுதூரம் சென்றது.
பாலம் கடக்கவும் பழகியோர் அநேகர்
சாலவும் நெருங்கிச் சார்ந்தனர் என்பின்.
108

 

108