பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இயற்றிய ஆன்றோர் எண்ணிய பொருளுடன்
பயிற்றிய வண்ணம் பண்புறக் கேட்டேன்.
அந்நாள் இரவிலென் பொன்னகர்த் [1]தாலுகா
மன்னிய நல்லோன், மாநிற மேனியோன்,
அருட்டிறம் நிறைந்த அந்தணர் குலத்தோன்,
[2].•கிருட்டினன் என்னும் கிழவன் பெயரினோன்
ஆங்கிலம் எனக்கு அழகுறச் சொல்லினன்.
தாங்கிலே னாயினும் தகுதியிற் கேட்டதை
மனத்தினுட் செலுத்தி மறக்கா தொவ்வொரு
தினத்தினும் படித்துச் சிந்தித்து நின்றேன்.


  1. தாலூகா - தாலுகா ஆபீஸ்.
  2. •தாலூகா ஆபீஸ் கிருஷ்ணய்யர்

8