பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிறையில் ஒர் வேடிக்கை


மெய்யில் வெளுத்த வேஷ்டி, உடுத்துக்
கஞ்சியும் உணவும் கொண்டுவரச் செய்தான்.
ஜாதியே தங்கள் பாரேன் எனினும்,
தனியே சமைத்த 'புனித உணவைக்
கொள்ளயான் விரும்பிக் கொண்டுவந் தவன்பால்

  • விள்ளடா உன்னூர்; விளம்படா உன்குலம்"

என்றேன். அவன் தான், "என்னூர் மதுரை;
என்குலம் சைவம்" என்றான், “ஜாதி
என்னடா? என்றேன். என்றான் - முதலி.

  • என்னடா முதலிநீ" என்றேன். விழித்தான்.

“பார்ப்பான் அல்லது பாண்டிவேளாளன்
சாப்பா டாக்கித் தந்தால் உண்பேன்
என்று ஜெயில் பால் இயம் "பெனச் சொன்னேன்.
நன்றெனச் சென்றான். நான் உணாதிருந்தேன்
மூன்று நாள் இங்ஙனம் முடிந்தன. காட்ஸன்
தோன்றினான் என்முன் ; சொன்னேன் நடந்ததை.
ஆறுமுகம் பிள்ளை யாரிடமும் உண்கிறான்.
கூறுக நின்னுடை குலந்தான் மேலோ?"
என்றான் காட்ஸன். நன்றா அவன்சொல்
கேளாத தாலவன் கிட்ட நெருங்கினேன்
ஓடினன் அப்ஸ்டெயர்ஸ். 'உடனே வெளிநின்று
பார்ப்பான் ஒருவனைக் கூப்பிட்டுணவினை
ஆக்கி அளித்தவன் சாப்பிட்ட பின்னர்க்
1 புனித உணவ-சைவ உணவு.
1
134

 

134