பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருவருக்காக ஊருக்கெல்லாம் கல்வி! நாலாறு திங்களில் நான்மறை யாளன் வேலை முறைமையில் வேற்றூர் சென் றனன். உடனென் பிதாவாம் உத்தம சீலன் திடனொடு சிலரைச் சேர்த்தென் னூரின் மக்கள் யாவரும் மகிழ்ச்சியின் ஆங்கிலம் தக்க இயலொடு சார்ந்துகற் றற்குக் கலாசாலை அமைத்திடக் கருதி, அதற்கு வலாரும் வலுநரும் மதித்திடத் தமிழுடன் ஆங்கிலம் கற்றே அறவினை வளர்த்தோன் ஈங்கெவர் தமக்கும் இன்புற உணர்த்தும் திறத்தினைக் கொண்டு சீர்பல எய்தி 'அறத்தினை இயற்றி | அறம்வளர்த்த நாதனாம் எட்டயபுரத்தில் இருந்த சீலனைத் திட்டங் கட்டிச் சீக்கிரம் கொணர்ந்து சிவபிரான் சந்நிதித் (தெருவில் அவனுடை அவமாக் கிடந்த அழகிய நிலத்திற் கட்டிடம் ஒன்று கட்டுவித் ததிலொரு பட்டப் பகற்குளே பள்ளியை அமைத்தனன். சிறுவர் யாவரும் சென்றதிற் சேர்ந்து மறுவிற் கல்வியை மாசறக் கற்றேம். ஓரீர் ஆண்டில் ஒப்பிலான் அருளால் ஈரிரு வகுப்பினை எளிதினிற் கடந்தேன் ; அறம்வார்த்த நாதன் - அறம் வளர்த்த நாத பிள்ளை.

9

9

அறம்வார்த்த நாதன் - அறம் வளர்த்த நாத பிள்ளை.