பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கண்ணனூர்ச் சிறை வாசம்.


காலை யொன்றில் கழறிய ஜெயிலர்
சாலவும் வேகமாச் சார்ந்தென் அரங்கினை
“வா”வென் றழைத்தான். காவென் றிறைவனைத்
தொழுதவன் பின்னே துரிதமா நடந்தேன்.
பழுதிலா கேற்றுப் பக்கம் சென்றதும்
வெளியில் ரிசர்வுப் போலீஸ் வெள்ளை
ஒளி இன்ஸ் பெக்டர் ஒருவனும் கறுப்புக்
கான்ஸ்டபிள் இருவரும் தோன்றினர் என்முன்.
இட்டுச் செல்லலாம் என்றனன் ஜெயிலர்
தொட்டு விலங்கினை இட்டனர் என்கை.
நடந்தேன் பாயில் ஸ்டேஷன் நண்ணினேம்:
கடந்தே கேற்றினை அடைந்தேம் டிரெய்னை.
கண்ணனூர்ச் சிறையினை நண்ணுதற் காக
என்னை அழைத்தங் கேகுவ தாகக்
கூறினர் மூன்று போலீ ஸார்களும்.
கண்ணனூர்ச் சிறையினை நண்ணினேம் மாலையில்.
[1]கோரன் டைன்பிளாக் கோரமோர் அரங்குதான்
அளிக்கப் பட்டதென் வசிப்பிற்காக.
அந்த பிளாக்கின் அழகேஜ் ஜெயிலின்
எந்த பிளாக்கிலும் இல்லையென் றறையலாம்.
நடுவில் தோட்டம்; நான்கு பக்கமும்
தொடுமரங் கொவ்வொரு டஜனும்; அவைமுன்
நன்னெடு விசாந்தா நான்கும் பின்புறம்

 

  1. கோரன்டைன் பிளாக்-Quarantine Block

138