பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பகலினும் இரவினும் பள்ளியினும் இல்லினும்
‘பகலவன்' என அவன் பண்புடன் அளித்த
கல்வியைப் பெற்றுக் களித்திடும் நாளையிற்
செல்வம் மிகுந்த திருநெல்வேலியின்
அருகினி லுள்ள அழகு றும் : இந்துப்
பெரியகலா சாலையைப் பேணி யடைந்து
சின்னாட் கற்றுத் திருமந் திரநகர்
மன்னா நின்று ; மறையவர் சார்ந்து
திருவடி தொழுது சேர்ந்தவன் பள்ளியை
மருவி நின்று வாசிக்க லானேன்.
மாலடி வணங்கும் மாமறை யாளன்,
நாலு முளமே நாளும் புனைவோன்,
கதியொடு நடப்போன் * கஸ்தூரிப் பெயரினோன்,
மதியுயர் கல்வியை மாசறக் கற்றோன்,
வல்லவை தன்னுள் வல்லவை சேரான்,
நல்லவை தன்னுள் நல்லவை சொல்வான்.
அறைந்தன யாவும் அண்ணாத் துறையோன்
திறந்தனை விளக்கிச் செப்பிய யாவும்
கேட்டுக் கற்றேன் கிளர்ச்சியில் ஆங்கிலம்.
நாட்டினில் என்றும் நலம் தருந் தமிழைத்
தவறிலா துணர்ந்து தக்கோ னான
1 சவரி ராயச் சான்றோன் உரைக்கக்
கேட்டுக் கற்றேன். கிட்டிய பரீட்சையில்
ஓட்டம் உற்றேன், ஊக்கம் விடாது
8 இந்துப் பெரிய கலாசாலை-ஹிந்துக் காலேஜைச் சேர்ந்த
ஹைஸ்கூல்,
1 மறையவர்-அண்ணாத்துரை ஐயர்.

  • கஸ்தூரிப் பெயரினோன்--கஸ்தூரி ஐயங்கார்.

1 சவரி ராயர்-- திருச்சி செயின்டு ஜொசப் காலேஜ் தலைமைத்
தமிழ் பண்டிதர் சவரி ராயப் பிள்ளை,
13

 

13