பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தமிழ் நாட்டு விளையாட்டுகள்.

பிற்றைத் திங்களிற் பேணாது கல்வியை
மற்றைச் சிறுவரை மருவி, அவரொடு
சுவர்மேல் நடத்தல், தொன்மரம் ஏறுதல்,
கவண் கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,
கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,
எண்ணினைச் சுவாசம் இழக்காதி யம்பல்,
குதிவட் டாடுதல், கோலி தெறித்தல்,
குதிரைமீ தூர்தல், கோலேறி நடத்தல்
காற்றிரி எறிதல், கான்மாறி யோடுதல்
மேற்றிரி பந்தின் விளையாட்டுப் பற்பல.
சடுகுடு, கிளியந் தட்டு, பல்லி,
தெடுகடு மோட்டம், நீர்விளை யாட்டம்,
கம்பு சுற்றுதல், கத்தி வீசுதல்,
[1]தம்மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,
கசாத்து, பஸ்கி, கலப்புறு குஸ்தி,
நிசத்துச் சண்டையில் நீந்தும் முறைகள்,
தாயம், சோவி, சதுரங்கம், சொக்கட்டான்,
காயிதச் சீட்டுக் கரந்திருந் தாடுதல்,
வெடிகொடு சுடுதல், வில்கொடு தெறித்தல்,
அடிபிடி சண்டை அளவில புரிந்தேன்.

 

  1. தம்— மூச்சு (Dum)

19