பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நீதிபதி (?) மீது வழக்கு.

t நீதி பதியாய் நின்றாரில் : ஒருவன்
ஓதி உணர்ந்தும் உரைத்தும் பிறர்க்கு
அடங்குதல் இன்றி அகங்கரித்து நின்று
திடங்கொண் டவரையும் செல்வவான் களையும்
தண்டித் தழித்தலொடு தன்பெயர் சொல்லி
அண்டினோர் லஞ்சம் கொண்டிட நேர்ந்ததால்
அவன்கொண் டானென அவன்மேல் இருவரால்
துவன்றிய கேஸ்களில் துணை அவர்க் களித்தேன்
பின் அவன் அடங்கிப் பெருமதி யுற்றான்.
பின் அக் கேஸ்களைப் பேணா தொழித்தேன்.
மனத்தொடு லஞ்சம் வாங்கிய இருவரைத்
தனத்திற் குறைக்கவும் தள்ளவும் செய்தேன்.
இச்செயல் எல்லாம் என்னுயர் தந்தையின்
இச்சைக் கெதிரா யிருந்துவந் தமையால்,
கருமந் திரண்டு கனிதர நின்றதால்,
திருமந் திரநகர் சேர்ந்தவண் தங்கிச்
சொல்லிய தொழிலைத் துணையற இயற்றி
எல்லை யிலாநிதி யீட்டினேன் ; ஈந்தேன்.
பிடித்த கட்சியின் பெயரும் விவரமும்
எடுத்திவண் உரைக்க இயலா தென்னால்.

 

t நீதிபதி- சப்மாஜிஸ்டிரேட்.

1 ஒருவன்-மிஸ்டர் ஏகாம்பா மய்யர், || இருவர்-சம்பளம் குறைக்கப்ப கிளார்க்காக ‘ரெடியூஸ்' செய்யப்பட்டவர் மிஸ்டர் வாசுதேவ ராவ்: ‘டிஸ்மிஸ்' செய்யப்பட்டவர் மிஸ்டர் பஞ்சாபகேசய்யர். பி. எ. பி. எல். {Reflist}}

27