பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறரும் நம்முரை பேசத் துணிவரே.
உறவினை விடுத்தல் ஒக்குமோ" என்றனள்.
உற்றான் ஒருவன் ஒருநல் கட்சியோ
டுற்றான் : நல்கினான்
ஒளித்து வந்து பின்
"உரிய கமிஷனை உதவுக" என்றான்.
புரிவ தறியாது பொள்ளெனச் சென்றுயான்
மங்கையை வினவினேன். மதியொடு பணிந்து
செங்கைப் பொருளைத் திருப்பிக் கட்சிபால்
கொடுக்க , அவனைக் கொள்ளற்க என்முள்
வடுக்கண் டொழிக்கும் மந்திரி யனையாள்.
இத்தகை அறிவினள் என்னரும் பிழைகளை,
எத்தகை உரியர் இயம்பினும் தன்னுடை
பொறிகளே காணினும் பொய்யெனும் :பேதமை
செறிவுறக் கொண்டனள்; சிறப்புற நின்றனள்.
செய்ய என் தந்தை திட்டுவன் அடிக்கடி
செய்யா ததனால் சீர்சிறப் பவள் தாய்,
மனம் பொறுக்காது மாற்றுரை பகர்வேன் -
அனம்போல் வந்தெனை ஆற்றியே நிற்பள்.
எண்ணிலா நண்பரை இழுத்துக் கொண்டுயான்
உண்ணச் செல்லுவேன் உரையாது முன்னர்.
அறுசுவை அடிசில் அன்பொடு படைப்பள்
சிறிதும் தாமதம் தெரிந்திலேன் என்றும்
பாடுவள் இன்புறப் பாதம் வருடுவள் ;
கூடுவள் கூடெனக் கூறிய பொழுதே
உடையோ குகையோ ஒன்றும் என்றும்
படைஎனக் கேட்டிலன் பண்பெலாஞ் செய்தனள்.
தொள்ளாயிரத்தில் சுவாமிநா யகமும்
4 - கள்ளினும் இனிமையள் கனவாச் சென்றாள் "
எனவுரைத் திடவும், இரவினில் விழித்தவன்
மனஉ வப்புடனே மருந்தினை வழங்கவும்
நீங்கினள். அவளினம் நீங்கிக் கொள்ளேன்."
என்றேன். பிதா அவள் இனைய பாட்டன்
பேத்திமீ னாட்சியை வாழ்த்திஎற் களித்தான்
இருமகார் பெற்றேன். என் குணம் மொழிவனே.
கள் -தேன்.

32