பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குணத்தின் குன்றம்

மறுவிலா என்னுயர் மனத்தில் என்றும்
சிறுமையும் வெகுளியும் செறிவுறக் கொண்டேன்.

  • மதத்தினை யுடையார் மதத்தினை அடக்கி

இதத்தினைப் புரியும் இயல்பினை யுடையேன்:
பற்றுள்ள மென்னிடம் பார்த்தும் அறியேன்:
வெற்றுரை என்றும் விரும்பேன் கேட்கவும்:
அழுக்கா றென்றும் அறியேன் படிப்பினும்,
ஒழுக்கா றென்றும் உன்னுவேன் இழுக்கினும்
பொய்யுரை என்றும் புகலேன். ஆனால்
மெய்யுரை என்றும் விளம்பேன் பகைபால்
தவாவினை யெல்லாம் சாற்றுவேன் புரிவேன்;
அவாவினை யுற்றேன் அன்பினும் அறிவினும்
தொல்லை நூலினும் தொல்லை நெறியினும்:
இல்லை ' எனுஞ்சொல் எவர்க்கும் உரைத்திலேன்;
இனியவை கூறும் இயல்பினே னாயினும்
துனியது கொள்ளின் சொல்வேன் இன்னா:
தீவினை புரிதல் தீவினை யார்பால்
தூவினை என்றே சொல்வேன்; புரிவேன்.
உயிர்க்கொரு துன்பமும் உள்ளேன்; தீய
உயிர்க்கது புரிவேன் உயர் நெறிப் படுத்தவே.
அன்பினும் அருளினும் அளவு கடந்தேன்:
இன்பினும் மகிழ்வினும் இயல்பு கடந்தேன்;
அறத்தினை என்றும் ஆற்றுவேன்; சொல்வேன்:
மதம் அகங்காரம்-யான்பெரியன் எனல்.

33

3