பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 


  • அபேதா னந்தன், பிரமா னந்தனாம்

சீரிள வேனிலும், தென்றலும் வந்தன.
ஏருள இன்பமும் இலாபம் பலவும்
நலங்கள் பலவும் நல்கும் கனிதரும்
மலர்கள் மூன்று மலர்ந்துள தச்செடி.
அவைதாம் :
எங்கணும் புகழ்மணம் இன்புற வீசி
துங்கம் விரவிய சுகவொளி பரப்பிப்
பலபல சமையம் பலபல வருணம்
பலபல விடத்துப் பலபல விதத்துத்
தோற்றி நிற்பச் சொல்லரும் வடிவங்கள்
ஏற்றிவண் விளங்கும் இறைவன் குணத்தொடு
கருமம் புரிதரக் கனிதரும் நமது
“தரும சங்க நெசவு சாலை,”
நாடுசேர் “சுதேசிய நாவாய்ச் சங்கம்,”
பாடுசேர் “சுதேசியப் பண்டக சாலை”
இவைதாம் உற்ற இடுக்கணும் களையும்
நவையறு பலன்களும் நானினி மொழிவனே:

 

*விவேகாநந்தர் மடத்தைச் சேர்த்த அபேதானந்த ஸ்வாமியும்,

பாய் பாமானந் தரும்.

43