பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கப்பல் கம்பெனிக்கு கஷ்டங்கள்.


  • “பூ”வென மொழிந்த மூவகைச் சங்கமும்

மேவிய பற்பல விளம்புதற் கரிய
இடுக்கணும் களைவும் இச்சிறு குறிப்பில்
தொடுக்கவும் இயலுமோ சொல்லரும் துணைவ!
ஆயினும் ஒருசில அறைவேன், அந்தோ! :
பேயெனப் பற்பலர் பிதற்றி வந்த
“இலாபம் தருமோ இத்தொழில் இந்நாள்?
கலாபம் முன்னர்க் காகம் ஆடுதல்
போலாம் சுதேசியம்: புதுமை புதுமையா
நாலா விதத்தினில் நயக்குறும் † பிதமுன்
”எனும்பல மொழிகளால் நெசவுசா லைக்கு
முன்பணம் கொடுப்பதா மொழிந்த பலரின்
மன்னிதி யாவும் வாராது மறைந்தன ;
நன்னய மொடுமுன் நல்கிய சிலர்தம்
பொருளினைக் கேட்டுப் ‘பொள்’ளெனக் கொண்டனர்.
மதியினைக் கொண்டு வண்மையைப் பெருக்கி
என்னுயிர் நண்பனா யென்பல மொழிகளும்
உன்னரு மறையென உவப்பொடு கொள்ளும்
1 குருநாதன் ஒருவனே கொண்டிலன் : அவன்'பின்
தருவேன்' என்றதைத் தந்திலன் மறப்பால்,

 

  • 'பூ' வென மொழிதல் பிறர், ' பூ' இவ்வளவுதானா ? எனச்

கேட்கும்படி அவ்வளவு சுலபமாகக் கூறிவிட்ட t பிற-அன்னிய நாட்டுச்சாமான் 1 குருசாதன்-எட்டுக் குருநாதய்யர், நெல்லைக் கவச வழக்கில் தண்டனையுற்ற ஹெட்கான்ஸ்டபின்,

44