பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கூட்டுறவு சங்கத்தைக் கூடிடச் செய்ததும்,
சிதம்பரம் சென்றவண் சேர்த்துப் பலரை
இதம்பெறும் வழிகளை இயம்பிய ஒன்றும்,
தஞ்சைக் குழுவினைச் சார்ந்துநின் றவரின்
நெஞ்சம் திரும்பிட நிகழ்த்திய ஒன்றும்,
கொழும்பிற் கப்பல் பங்குகள் கொண்டதும்,
அழும்படி வந்த* வதன் ஆபத் தறுத்ததும்,
தேசம் மதித்திடும் சிவசிதம் பரத்தை
ஏஜண்டாக ஏற்படுத் தினதும்,
அவண்சில வணிகரை அடுத்துக் கொண்டதும்,
அவண் சில இடங்களில் அறைந்தபிர சங்கமும்,
- சூரற்றுச் சென்றதும், தொன்னெறிக் காங்கிரஸ்
வீரமற் றழிந்ததும், ! வேறொன் றாயதும்,
திலகர் முதலிய தேசபக் தர்கள்
பலமுறை என்னோடு பகர்ந்து நின்றதும்,
3 சென்னைச் கிளையின் செக்கிரட் டெரியா
மன்னி யிருக்க வரம்எனக் கீந்ததும்,
“சிவமொடு சேர்ந்து செப்பிய பலவும்
தவமுயர் பாரதத் தாயைத் தொழுததும்,
||நான்கு நெறிக்கு நானே சென்று
தேன்கனி என்னவென் சிந்தையுள் நிற்கும்
33 குருநாத நண்பனைக் கொணர்ந்ததும், கப்பலின்
வருமான வழிகளை வளர்த்ததும், பிறவும்.
தேய ஆட்சியைத் திருப்பிடச் செய்யும்
மாயச் செயலென மதித்து மயங்கித்










அதன்-கப்பல் கம்பெனியின்.
+ சூரற்-சூரத் காங்கிரஸ்.

  • வேறொன்று-இந்தியன் நேஷனலிஸ்டு காங்கிரஸ்.

நேஷனிலிஸ்ட் காங்கிரஸின் சென்னை மாகாணக் காரியதரிசி.
|| திருநெல்வேலிக்கு அருகிலுள்ள நாங்கூனேரி எனும் ஊர்.
33 குருநாதன்-எட்டுக் குருநாதய்யர்.
56

 

56