பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இரக்கம் உற்றவன்' கீழ்மேல் பார்த்தெனை
'ஆள் கை இங்கு நீ அறிந்திடச் செய்ததென்?
வாள்கை எடுப்பேம் ; வன்கண் புரிவேம்"
எனசில இயம்பி எடுத்துத் தந்தான்
தன திட மிருந்த சண்முகன் விளம்பரம்.
வாசித் தவற்கு “மறுமொழி ஐய!
பேசிய பின்னர்ப் பிழையிலேன் என்பீர் ;
பொறுமையொடு கேட்டுப் புவியிற் செல்மின் ;
சிறுமைச் சொற்களைச் செப்பன்மின் என்று
“முந்திய ஆர்ட1ை இந்த விளம்பரம்
எந்த வகையில் இகழ்ந்த" தென்றேன்.
டிப்டி ஆப்பரிக் டேடோ "இங்கிவன்
கசியச் சொல்வதைக் கவனிக்க வேண்டா,"
“சாலைக் குள்ளே சர்க்கார் வந்தால்
மேலைக் கலகம் விளையும் " என்றனன் ;
நெருநல் ஆர்டரை நிகழ்த்திய பின்னவன்
பெருக நடாத்தினன் பிரசங்கம் : அன்றியும்
இன்றும் திரும்ப இங்கும் அங்கும்
ஒன்று புகல்வதா நிகழ்த்தினன் என்றான்.
தரும சாலை தனித்ததொரு கட்டிடம்
ஒருவன் சொந்த வுடமையா யுள்ளது
போலீஸ் வரலெனப் புகன்றது குற்றமோ?
போலீஸ் வரலவன் புகைச்சலைச் செய்யும்
எனவவன் நினைந்தனன். இங்கியான் பேசேன்.
என தகம் பேசுதல் இழுக்கோ?" என்றேன்.
சொல்லிய டிப்டி சூப்பரின் டொடு "நீ
சொல்லிய இடத்தில் தோன்றிப் படையொடு
நடப்பதைப் பார்ப்போம் நாமே" என்றான்.
நடப்பதைப் பாரும் நன்றா” என்றேன்.
“ சொந்த இடத்தினில் தோன்றுவன் என்று நீ
எந்த மதியினால் இயம்பினை?" " ஏகேல் "
61

 

61