பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/67

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

என சில உரைத்தவற்கு என்னிடம் விஞ்சு
“கதையை செய்து நீ கடற்கரைப் பிரசங்கம்
ஒன்றனை மட்டும் ஒழியென” வேண்டினன்.
“இன்று அவன் பேசுவான் ஏதிலன்” என்றேன்.
நடந்தான் விஞ்சு நன்றெனப் பிறக்கனொடு.
நடந்தேன் நானும்; நன்னினேன் கடற்கரை.
போலீஸ் வைவர் பொழுதுபடு முன்னர்
காலி நிலத்திற் கடற்கரை ஒரம்
வெடிகள் கைக்கொண்டு வேண்டிய மட்டும்
கடிகள் தரல்போல் அலரி நின்றனர்.
பத்ம நாபன் பயந்திட எழுந்தான்.
சத்தம் மிகுந்தது ஜனத்திரள் பெருக்கம்.

 

62