பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

விஞ்சு பதிலுரை விளம்பத் தெரியா
தஞ்சி விழித்தனன். அந்தச் சமையம்
திருநெல்வேலி டிவிஷன் போலீஸ்
பெரிய இன்ஸ்பெக்டர் "பேசா தொன்றும்
செல்லுக" என்றனன். சேர்ந்தவண் இருந்த
நல்லவர் பலரையும் நானுடன் பார்த்துக்
கொடுத்த மனுவிற்குக் கூறிலன் விடையினம் ;
அடுத்தனர் போலீஸார் அதன்முன். ஆதலால்
செல்கிறோம் சிறைக் "கெனச் செப்பினேன். அவருள்
நல்லியல் சுந்தரராஜன் என்பவன்
“ சிதம்பரம் முகத்தின் தேஜசைப் பாரென"ப்
பதம் சில வழங்கினன் பக்க நின்றார்க்கு.
தெற்கே நோக்கினன் செப்பிய இன்ஸ்பெக்டர்
தெற்குள , எமனூர் செல்லுக என்றல்போல்.
குருநாதன் இடத்துக் கொண்டுபோய்ப் பாலனைத்
"தருவாய் அவனுடை தாயிடம் " என்று
சென்றேம் மூவரும் ; தெற்கொரு தீவழி
அன்றே கண்டேம் : அதன் வழி இறங்கினேம்.
புவியினைத் தொடவும் பொள்ளென அழைத்தான்
கவியின் செயலெலாம் கைக்கொண்ட விஞ்சு,
வந்தேம் மேடை "மறுபடி நீர்மனுத்
தந்தது வாயிதாச் சாற்றிய பின்னரே.
அதனால் ஜாமீனை அங்கீ கரித்திலேன்,

 

1 எமனூர்-சாவு

  • கவி-குசங்கு,

79