பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிறைச்சாலைக்குள்ளே.......

மார்ச்சுவீ ராறு மாலைமணி மூன்றுக்குத்
தேர்ச்சியில் மிக்க சிவமொடு பத்மனொடும்
சிறையுள் நுழையவும் ஜெயிலர் வந்தெம்
மறைமுதல் யாவும் மயக்குறப் பார்த்தென்
ஐவிரல் களுமொன் றாகும் வகையிலென்
கைவிரல் மோதிரம் கழற்றி வாங்கி
"கதிர்பார்த்த கணமுதல் கருதிநும் வரவினை
எதிர்பார்த் திருக்கிறோம் இவ்விடம் நாங்கள்
தந்தையும் மகனும் சாத்தனும் என்றிட
வந்தீர் மூவரும் மதியுடன் இருமின்
எனமொழிந் தான்.யான் " இயம்பிய தழகே
மனமொழி ஒத்துநீர் வந்திடின் " என்று
சொந்த உணவிற்கென் சொல்கிறீர்?" என்றேன்.
“அந்த உரையினை அறைந்திடும் மேலுள
சிறை சூப்பரிண் டெண்டிடம் " என்றான்
அறையச் சென்றேன். அவனென்னைக் கண்டதும்,
“கைதி யாகநீர் காணப் படவிலை;
கைதி யாகநீர் கருதவிலை" என்றான்.
“உரைத்த நும்முரை உண்மையே யாகுக;
உரைத்திட வந்ததை உளங்கொளும் ” என்றேன்;
81
6

 

81