பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொந்த உணவும், சோறும் பிறவும்


என்னென இயம்பி ஏறவும் இறங்கவும் தின்னும் எமனெனச் சீறியெனைப்

                      பார்த்தான்.

அவனையும் நானுடன் அங்ஙனம்

                      பார்த்தேன்.

அவனதன் பின்னர் அடங்கி விழித்தான் "சொந்த உணவுக்குச் சொல்லுக

                       விரைவில்

வந்திவண் நிற்கும் மனிதற்"

                    கென்றேன்

“சரி' எனச் சொன்னான். சண்முக

                       சுந்தரம் 

பரிவுடன் உணவவன் பார்த்திடக்

                   கொணர்ந்தான்

உண்டேன் ; சிவமோ உண்டனன்

                       சிறிது ;

உண்டிலன் பத்மன் உணர்ச்சி

                      பேதத்தால்,

படுக்கை வராததால் படுத்தேம்

                       தார்ப்பாய்

மடிக்கண் அங்குள மாப்பிளைத்

                      தலையணை

கொண்டு நன்குகண் கூட உறங்கிக் கண்டேன் விழிக்கவும் காலையை

                       முன்போல்

பலகாரம் என்றிவண் பகர்ந்திடும்

                      தோசையில்

சிலகாரப் பொடி நெய் சேர்த்தத னோடு காப்பி கொணர்ந்தான். களிப்புடன்

                        உண்டேம்

ஏப்பம் வந்திட இம்மியும் விடாது குருநாதன் படுக்கைகள்

        கொணர்ந்தான். கவிஞனை

ஒரு நாளும் இலாத உளத்தொடு

                        கண்டேன்.

ஞான சிகாமணி நண்பனுள் வந்து ஞான மொழிசில கவின்று போயினன். அறுசுவை மதியம் அருந்தவும்

                       வாட்டர்கள்

ஞானசிகாமணி-நெல்லை ஞானசிகாமணி முதலியார்.

82


82