பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறையதிகாரிகள் மூடத்தனம்.


அறைக்குள் திண்ணைமேல் அலுத்தியான் இருந்தேன்.
“நின்றிட இங்கியான் நீவீர் இருப்பதென்”
என்றனன் ஜயிலர். “ஏகுதற் காய
விதிவர விலை” என விளம்பினேன் அவனுடன்
"பதிலுரை தருவதைப் பார். இவர் உடுத்திய
ஆடையை அவிழென அறைந்தனன் : தடியரென்
ஆடையை அவிழ்த்தனர். “அரைஞாண்” என்றனர்.
“அரைஞாண் எங்ஙனம் அங்குற்ற" தென்றான்
“அரைஞாண் என்றும் அங்குள” தென்றேன்.
சென்றான் அத்துடன் ; சிரித்தேம் நாங்கள்.
நின்றான் :பார்த்தான் ; நினைந்தான் : போயினான்.
பிறகெமை நெருங்கிப் பேணிப் பணிந்தெம்
சிறகென நின்று செய்தனன் உதவிகள்.

86