பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/94

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

சிகை நீக்கப் படலம்!


சௌத்திற் கென்னூர் : அங்கனுள் இருந்தான்,
கௌரவப் படியெனைக் கண்டு வணங்கினான்.
நயமுள கத்தியை நல்கினான் டிரசர்
பயமொடு பணிந்தெம் பணிகளைச் செய்தான்.
தாடியை யெடுத்திடச் சாற்றிய சிவம்தான்
வாடி," என்றிடும் வண்ணம் ஆயினான்.
மறுநாட் காலையில் வந்தசூப் பிரண்டெண்டு
குறுகிய மொழிசில கூறினான். * நும்மின்
சொல்லின் பின்னரே தொலைத்தனன் மயிரினை ;
எல்லையில் லாமல்நீர் இயம்பலென் ' என்றேன்.
இனந்தெரிய விலை"யென ஏங்கினான். ' என்றும்
இனந்தனை மறுப்பவர் ஈங்கிலை " என்றேன்.
வாலேசுக் கெழுதஅவன் வாக்குமூலம் கேட்டான்
'சாலவும் பிரசங்கம் சாற்றிய சிவம்நான்"
என மொழி தந்தனன் என்றும் உண்மையே
மனமொறி ஒத்திட வரையுமென் நண்பன்.
எண்ணெய்க் குளி்கெமக் கீந்திட அனுமதிக்
கண்ணில் சிறையினன் கடமைப்பட் டிருந்தும்
மறுத்தனன் சிலநாள். வருத்தி அவன்பின்
குறித்த தினங்கனில் குளித்தியாம் நின்றேம்
1 சௌரம்-சவரம்.
3. வாடி என்றிடும் வண்ணம்-பெண்போன்ற தோற்றம்,
தூத்துக்குடிக் கலகம் சம்பந்தமாக கைதியான சங்கன் என்னும்
நாவிதச் சகோதரன்.
நூலாசிரியர் சிறையினின்றும் வந்தபின் மீட்டும் வக்கில் வேலை
வாங்கித் தந்த ஹைகோர்ட் ஜட்ஜ் வாலெஸ் துரை, நூலா
சிரியர் தம் கடைசி மகற்கு 'வாலேசுவரன்' எனப் பெயரிட்
டுள்ளார்.
89

 

89